Tag Archives: வாடிப்பட்டி மேளம்

எங்க ஊர் தசரா!

பொதுவா நவராத்திரி வந்துட்டாலே இங்க சென்னைல எல்லோரும் கல்கத்தாவுக்கோ, இல்லை மைசூருக்கோ கிளம்பிடுறாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நானும் எங்க அண்ணனும் அங்க தான் தசராக்கு இருந்தோம். ஆனா பாருங்க எந்த ஊரு தசரா பாத்தாலும் எங்க ஊர் தசரா மாதிரி வராது. எந்தத்  திருநெல்வேலிக்காரனும் இதத்தான் சொல்லுவான். அதுலயும் டவுண்காரவுக “தேரோட்டம் மாதிரி வருமாவே”ம்பாவோ. பாளையங்கோட்டை தசரால ஒரு வித்தியாசம் உண்டு. இப்ப என்னவோ ஐபில் அது இதுங்காவோ, அதுக்கு முன்னாடியே தெருத் தெருவா பிரிஞ்சி, …