பாலை நிலத்தின் ஒரு பகுதி அதில் பகலை அறியாத ஒருவன் தனித்திருக்கும் ராத்திரிகளில் நினைவுகளிலேயே களித்திருந்தான். முன்னெப்போதோ மருத நிலத்தின் மழையில் மையல் கொண்டிருக்கையில் மயக்கத்துடன் நனைந்ததாய் நியாபகம் மழை நின்று போன பின்னும் மழை வாசனை போகாமல் காலம் கொடுத்த பாதையில் இன்று பாலையில் வந்து சேர்ந்திருந்தான். இரவில் பறக்கும் பருந்தை விரட்ட பாலையாழை மீட்டினான் விடலைகள் அலையும் நேரம் பாய் போட்டுத் தூங்கினான் பாலை நிலத்தில் மழை …