காலை காரை விட்டு இறங்கி வீட்டுக்கு வந்த உடனே ம்யூசிக் பிளேயர்ல ஷஃப்ஃபில் ஆப்ஷன்ல தும் ஹி ஹோ பாட்டு ஓட ஆரம்பிச்சது. எனக்கு எப்பவுமே சரியா இந்தி புரிஞ்சதில்லை. அரைகுறை தான். என்னவோ இந்தப் பாட்டுல முதல் வரியும் பாடியவர் பாடிய விதமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். சும்மா அதுக்காகவாச்சும் அப்போ அப்போ முதல் 30 செகண்ட் கேப்பேன் இந்தப் பாட்டை. அப்போதான் இன்னிக்கு எதோ ஒரு முக்கியமான நாள்லனு மனசுல தோணிகிட்டே இருந்துச்சு. தேதிகளை …