வசந்த காலத்தின் அந்தியில் மழை கொண்டு வந்தாள் ஒருத்தி சாரல் வேண்டுமா, மழை வாசனை போதுமா எனக் கேட்டாள் சாரல் மண்ணில் விழுந்தால் தானே வாசனை என்றேன் நான். உனக்கு மழை பற்றித் தெரியவில்லை எனச் சொல்லிச் சென்றாள். கோடைக் காலத்தின் மத்தியில் மழைக் கொண்டு வந்தாள் ஒருத்தி பெருமழை வேண்டுமா, உடல் நனைக்கப் போதுமா எனக் கேட்டாள் பெருமழையில் உடல் நனைக்கிறேன் என்றேன் நான். உனக்கு நனையத் தெரியவில்லை எனச் சொல்லிச் சென்றாள். மார்கழியின் குளிரில் …