குற்றப்புனைவுகளில் ஸ்கேண்டிநேவியன் நாவல்களை அடிக்க ஆள் இல்லை என்று பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது நிரூபணமாவது உண்டு. வாலாண்டர் தொடர்கள், அதற்கு முன் மார்ட்டின் பெக் என அவர்கள் படைத்த பாத்திரங்கள் ஏராளம். சமீபத்தில் அங்கு பிரபலமாக பேசப்பட்டுக் கொண்டிருப்பவர் யூ நெஸ்போ (Jo Nesbo). அவரது ஹாரி ஹோலே கதாபாத்திரம் மிகவும் பிரபலம். குடிப்பிரச்சினை உள்ள ஒரு போலீஸ் அதிகாரி. பல இடங்களில் டர்டி ஹாரியை நினைவுபடுத்தும் ஒரு பாத்திரம். யாருக்கும் அடங்காத, …