Tag Archives: குளிர்

மழைக்காலங்கள் எனக்கு பிடிப்பதில்லை!

நாங்கள் சந்திக்க நேரும் போதெல்லாம், மழை பெய்திருக்கிறது. அன்று, மொட்டை மாடியில் நின்று கைகள் நீட்டி காதல் சொன்ன போதும், பின்பு, இரண்டு அடி இடைவெளி விட்டு மலர்கள் நிறைந்த பாதையில் நடந்த போதும், சென்னை வந்து அவள் செல்கையில் வழியனுப்ப நெல்லை எக்ஸ்பிரஸ் ஜன்னலின் வழி விரல் பற்றிக் கொண்டு இருந்த போதும், “வரும்போதே மழைய கூட்டிகிட்டு வருவியா? ” என்று அவள் கேட்ட போதும், மழை மிகவும் பிடித்திருந்தது. அவள் செல்பேசியில் ஒலிக்கும் நியூயார்க் …