பாலா!! காதலுக்கு மரியாதை, லவ் டுடே போன்ற படங்களை பார்த்த பிறகு, இந்த 12ம் வகுப்பு படிக்குற பையனுக்கு காதலிக்க ஆசை வர்றது தப்பு இல்லனு நினைக்குறேன். அவனுக்கு தெரியும் அவங்க அப்பா அம்மா ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் எல்லாம் ஒத்துக்க மாட்டாங்க. அதனால அவன் அவங்க ஜாதியிலயே பொண்ணு தேட(!) ஆரம்பிச்சான். இந்த உயர்ந்த நோக்கத்துகாக அவனுக்கு பிடிக்காத பல விஷயங்கள அவன் செய்ய வேண்டி இருந்தது. முக்கியமானது அவன் சொந்தக்காரங்க கல்யாணத்துல கலந்துக்க …
போன தடவை நான் ஆப்பிள் வித்த கதையை சொல்லி இருந்தேன். படிக்காதவங்க இந்த சுட்டிய பாருங்க…இந்த தடவை அவசரப்பட்டு நாங்க மாட்டிகிட்ட கதை சொல்ல போறேன்.எங்களுக்கு லட்சுமணானு ஒரு ஃப்ரெண்ட் உண்டு. அவரோட அக்காவுக்கு கல்யாணம்னு நாங்க நண்பர்கள் எல்லாரும் கிளம்பி சங்கரன்கோவில் போனோம். எங்க செட்ல குமார்னு ஒரு பையன் உண்டு. நல்ல உயரம், கலர்னு அவந்தான் எங்க செட்ல ஹீரோ. ஆனா அவன் டேஸ்ட் சரி கிடையாது. அப்போ நாங்க ஊர்ல மெஸ் வெச்சிருந்தோம். …
அந்த ரங்கசாமிய நான் அடுத்த நாள் அதாவது நேத்திக்கு கூழ் கடைல வெச்சு பார்தேன். பய யான செவப்பு. சரி பய என்னதான் சொல்றான் பார்போமேன்னு கூழ் கடைல கம்னு நின்னுகிட்ருந்தேன்.கூழ் கடைல வந்து ரொம்ப பவ்யமா விசாரிச்சு, பைய வாங்கிட்டு கிளம்பினான். செமயா பச்ச கலர்ல கருப்பு டிசைன் போட்ட சட்ட, மோசமான நிலமைல ஒரு ஜீன், பயபுள்ள தலய வேற கலர் அடிச்சு விட்ருந்தான். நான் எதிர்பார்த்ததுக்கு கொஞ்சம் கூட மாறுபாடில்லை.கூட சரியா இவனுக்கு …
விஜய் நடிச்ச ஷாஜஹான் படம் பாத்திருகீங்களா? அதுல ஒரு காரெக்டர் “காதல், ஹும் காதல்” அப்படின்னு தலைல அடிச்சிட்டு போவார். அதே மாதிரி ஒரு மேட்டர் இன்னைக்கு எனக்கு நடந்தது. பாம்பே தியேட்டர்ல திருட்டு பயலே படம் பார்த்திட்டு திரும்பி வந்துகிட்டு இருந்தோம். எனக்கும் சரி என் நண்பர்களுக்கும் சரி கூழ் குடிக்க ரொம்ப பிடிக்கும். அப்பொ எங்களுக்கு முன்னடி கூழ் குடிச்சிட்டு போன பய அவன் பைய வெச்சிட்டு போய்ட்டான்.கூழ் கடைல உள்ள பையன், “அண்ணே! …
என் நண்பன் பாலாவுக்கும் அவன் தங்கச்சிக்கும் ஆகவே ஆகாது. சண்டைனா அப்படி பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிச்சுக்குவாங்க. அன்னைக்கு அவங்க வீட்ல உக்காந்து டி.வி. பார்த்துகிட்ருந்தேன். அப்பொ சர்ஃப் எக்ஸ்ல் விளம்பரம் போட்டான். அந்த பொண்ணு சகதில விழுந்தவுடன் அண்ணனுக்கு வரும் பாருங்க கோபம்.பார்த்துக்கிட்டு இருக்கும்போதெ பாலா கிட்ட கேட்டேன். “டேய்! இத மாதிரி சாரி கேளுனு சகதிய அடிப்பியா??” ” என் தங்கச்சிய வெணும்னா அடிப்பேன்” இந்த மாதிரி தங்கச்சி இருக்குற பசங்க எல்லாமே இப்படித்தான் இருக்குறாங்க. …
இப்பொ உங்களுக்கு அதிகமான சொத்து இருக்குங்க!!! சம்பாதிக்கணும்னு அவசியமே இல்ல அப்படின்னா நீங்க என்ன செய்வீங்க அப்படின்னு நிலானு ஒருத்தங்க பதிவு பொட்ருந்தாங்க. இந்தா இருக்கு சுட்டி.நான் என்ன பண்ணுவேன் தெரியுமா?? ஒரு நல்ல கம்பேனி கம்ப்யூட்டர் வாங்கி எங்க ஊர் பக்கத்தில உள்ள கிராமதுகெல்லாம், போய் கிளாஸ் எடுப்பேன். நமக்கு தெரிஞ்சத மத்தவங்களுக்கு சொல்லி குடுக்குற மாதிரி சுகம் வேற கிடையாது.வேற நல்ல நல்ல புத்தகமா வாங்கி போட்றது, 10த் படிக்குற பசங்ககிட்டயே உயர்கல்விக்கான சாய்ஸ் …
சமீபத்துல எங்க அண்ணனோட பதிவுல இந்த மேட்டர் போடபட்டிருந்து. அதாவது சட்டுனு எங்க ஊர்ல பெரிய மனுஷன் ஆரவங்கள பத்தி. அவர் சொன்னது ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்ன்ற் கணக்கு தான். சொல்ல போனா நிறய சிரிக்க வைப்பானுங்க இந்த குரூப்ஸ்.“முட்டா பயல எல்லாம் தாண்டவக்கோனே; காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே” அப்படின்னு ஒரு பாட்டு உண்டு. அதெ மாதிரி தான். இந்த தடவை எங்க தொகுதியில நிக்க போற ஒருத்தன எனக்கு பத்து …
ஒரு கம்பெனி முதலாளி அவரோட ஃபாக்டரிய சுத்தி பர்க்க வந்தாராம். அப்பொ அங்க ஒரு பையன் வேலை எதுவும் பார்காம சும்மா நின்னுகிட்ருந்தான். அவர் அவன் கிட்ட போய் நின்னு“உனக்கு இங்க எவ்ளோபா சம்பளம்”னு கேட்டார்.அவன் குழப்பமா “2000 ரூபாய்”ன்னான்.உடனே அவர் பர்ஸ திறந்து கொஞ்ச ரூபா எடுத்து “இதுல 6000 இருக்கு. இனிமே இந்த பக்கமே வராத”னுட்டார்.அவனும் உடனே வாங்கிட்டு போய்ட்டான்.அப்புறம் அவர் தன்னோட மானேஜர் கிட்ட “இப்பொ நான் துரத்தினேனே அந்த பய இங்க …
ஒரு சின்ன சிந்தனை. உங்களுக்கு ஒரு விபத்தில் கையோ காலோ பொயிருச்சுன்னு வைங்க, ஒரு பேச்சுக்கு தாங்க, உங்க மனைவி உங்களை விட்டு போனா நீங்க எப்படி ஃபீல் பண்ணுவீங்க?இந்த தடவை “அவள் விகடன்” படிக்கும் பொழுது ஒரு படத்தோட விமர்சனம் படிச்சேன். படிக்கும் போதே ரொம்ப பாதிப்பு குடுத்த ஒரு கதை. அது ஒரு நெதர்லாந்து நாட்டு படம். படதோட பெயர் ஹெத் ஜுயிதே. வாசிக்க கஷ்டமாதான் இருக்கு ஆனா நல்ல ஒரு மேட்டர்.கதைப்படி மார்ஜே …