Stories

பொங்கல் – அன்னை மெஸ்

கடைசியா, இந்த வருஷம் தமிழ்ல எழுதணும்னு முடிவு பண்ணி, தை 1க்குத் துவங்கியாச்சு. சீக்கிரம் முடிச்சிருவேன்னு நினைக்குறேன். எழுதிக் கொண்டிருக்கும் அன்னை மெஸ் நூலிலிருந்து ஒரு பகுதி. புது வருசம் மொக்க வாங்கினதுக்கு அப்புறம் பெருசா யாரும் எதுவும் கண்டுக்கலை. ஆனா அந்த தடவை பொங்கலுக்கு பயங்கர பில்ட்-அப். ஒரு எப்.எம் சேனல் வெச்சு என்னெல்லாம் பண்ண முடியும்னு நாங்க முத தடவை பாத்தது அப்பத்தான். எங்க கடைக்கு எதுத்தாப்புல பேன்சி ஸ்டோர் வெச்சிருந்தவர் மணிமங்கை. அவருக்கு …

கனவுப் பட்டறை

நான் தமிழ் புத்தகங்கள் வாசித்து பல நாட்களாகி விட்டன. ஆங்கிலத்தில் புதினம் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்த பிறகு அதற்குண்டான பயிற்சியாக பல ஆங்கில நாவல்களை வாசித்ததன் பலன், தமிழை விட்டு தள்ளிச் சென்று கொண்டே இருந்திருக்கிறேன். இதை நான் உணராமலில்லை. இருந்தும் என்னை மீண்டும் தமிழ் உலகிற்குள் இழுக்கும் விசை என்னைத் சென்ற சனி வரைத் தொடவில்லை. சனிக்கிழமை அன்று டிஸ்கவரி புக் பேலஸில் நண்பர் மதியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்று வந்த …