பகுக்கப்படாதது

தி ரெடீமர் – நூல் அறிமுகம்.

சென்ற முறைப் பார்த்த ஹாரி ஹோலே நாவல் வரிசையில் வந்தது தான் இந்த நாவலும். யூ நெஸ்போ ஒரு கதை வொண்டர் இல்லை என்று எனக்கு நிரூபித்தது இந்த நாவலே. ஜெட் ஸ்பீடு என்றால் ஜெட் ஸ்பீடு. 1991ல் நார்வேயின் சால்வேஷன் ஆர்மி முகாமில் ஒரு 14 வயது பெண் கற்பழிக்கப்படுகிறாள். கட்டுக்கோப்பான குடும்பத்தில் வளர்ந்ததால் என்ன நடந்தது என யாரிடமும் சொல்ல முடியாமல் வளர்கிறாள். அதே நேரம் செர்பியப் போர் நடந்து கொண்டு இருக்கிறது. அங்கிருக்கும் …

தி ஸ்நோமேன் – யூ நெஸ்போ – நூல் அறிமுகம்.

    குற்றப்புனைவுகளில் ஸ்கேண்டிநேவியன் நாவல்களை அடிக்க ஆள் இல்லை என்று பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது நிரூபணமாவது உண்டு. வாலாண்டர் தொடர்கள், அதற்கு முன் மார்ட்டின் பெக் என அவர்கள் படைத்த பாத்திரங்கள் ஏராளம். சமீபத்தில் அங்கு பிரபலமாக பேசப்பட்டுக் கொண்டிருப்பவர் யூ நெஸ்போ (Jo Nesbo). அவரது ஹாரி ஹோலே கதாபாத்திரம் மிகவும் பிரபலம். குடிப்பிரச்சினை உள்ள ஒரு போலீஸ் அதிகாரி. பல இடங்களில் டர்டி ஹாரியை நினைவுபடுத்தும் ஒரு பாத்திரம். யாருக்கும் அடங்காத, …

எங்க ஊர் தசரா!

பொதுவா நவராத்திரி வந்துட்டாலே இங்க சென்னைல எல்லோரும் கல்கத்தாவுக்கோ, இல்லை மைசூருக்கோ கிளம்பிடுறாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நானும் எங்க அண்ணனும் அங்க தான் தசராக்கு இருந்தோம். ஆனா பாருங்க எந்த ஊரு தசரா பாத்தாலும் எங்க ஊர் தசரா மாதிரி வராது. எந்தத்  திருநெல்வேலிக்காரனும் இதத்தான் சொல்லுவான். அதுலயும் டவுண்காரவுக “தேரோட்டம் மாதிரி வருமாவே”ம்பாவோ. பாளையங்கோட்டை தசரால ஒரு வித்தியாசம் உண்டு. இப்ப என்னவோ ஐபில் அது இதுங்காவோ, அதுக்கு முன்னாடியே தெருத் தெருவா பிரிஞ்சி, …

தும் ஹி ஹோ!

காலை காரை விட்டு இறங்கி வீட்டுக்கு வந்த உடனே ம்யூசிக் பிளேயர்ல ஷஃப்ஃபில் ஆப்ஷன்ல தும் ஹி ஹோ பாட்டு ஓட ஆரம்பிச்சது. எனக்கு எப்பவுமே சரியா இந்தி புரிஞ்சதில்லை. அரைகுறை தான். என்னவோ இந்தப் பாட்டுல முதல் வரியும் பாடியவர் பாடிய விதமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். சும்மா அதுக்காகவாச்சும் அப்போ அப்போ முதல் 30 செகண்ட் கேப்பேன் இந்தப் பாட்டை. அப்போதான் இன்னிக்கு எதோ ஒரு முக்கியமான நாள்லனு மனசுல தோணிகிட்டே இருந்துச்சு. தேதிகளை …

பாலை நிலக் காதலன்

  பாலை நிலத்தின் ஒரு பகுதி அதில் பகலை அறியாத ஒருவன் தனித்திருக்கும் ராத்திரிகளில் நினைவுகளிலேயே களித்திருந்தான்.   முன்னெப்போதோ மருத நிலத்தின் மழையில் மையல் கொண்டிருக்கையில் மயக்கத்துடன் நனைந்ததாய் நியாபகம்   மழை நின்று போன பின்னும் மழை வாசனை போகாமல் காலம் கொடுத்த பாதையில் இன்று பாலையில் வந்து சேர்ந்திருந்தான்.   இரவில் பறக்கும் பருந்தை விரட்ட பாலையாழை மீட்டினான் விடலைகள் அலையும் நேரம் பாய் போட்டுத் தூங்கினான்   பாலை நிலத்தில் மழை …

ஷிப் ஆப் தீஸியஸ்

இண்டி சினிமா என்பதை பல நாட்கள் இந்தி சினிமா என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். சமீபத்தில் தான் அது வேறு விஷயம் எனத் தெரிய வந்தது. அதாவது, பொதுவான சினிமாவாக இல்லாமல், தான் நினைத்ததை அப்படியே திரைக்கு கொண்டு வர இயக்குனர் ஒருவருக்கு தயாரிப்பாளர் யாரும் உதவாத பட்சத்தில் தனியாக அவரே படம் செய்வது தான் அது. நிறைய படங்கள் அது போல பார்த்ததில்லை என்றாலும் சமீபத்தில் பார்த்த ஷிப் ஆப் தீஸியஸ் என்ற படம் மிகவும் என்னை …

காசி நாடனும் கிராமியப் பாடலும்

காரின் குளிரில் பாதங்கள் விரைத்து விட்டன. பயணத்தில் படிக்க எனக் கொண்டு வந்திருந்த புத்தகங்கள் வீட்டில் இருந்து எடுத்து வந்த மாதிரியே இருந்தன. ஒரு பக்கம் கூட புரட்டவில்லை. காரில் ஏறியவுடன் அப்படி ஒரு தூக்கம். இப்படிப்பட்ட காரில் எல்லாம் நம்மையும் ஏற்றிக் கொள்வார்களா என பள்ளிக் காலத்தில் காரின் பின் ஓடியதெல்லாம் நினைவுக்கு வந்தது. ”அதெல்லாம் மறந்துடு. சாதிச்சாச்சு” மனசு சொல்லியது. இல்லை.. இன்னும் ஒரே ஒரு படி. புன்னைவயல் கிராமத்தில் கார் திரும்பிய பொழுது …

மழை வேண்டுமா?

வசந்த காலத்தின் அந்தியில் மழை கொண்டு வந்தாள் ஒருத்தி சாரல் வேண்டுமா, மழை வாசனை போதுமா எனக் கேட்டாள் சாரல் மண்ணில் விழுந்தால் தானே வாசனை என்றேன் நான். உனக்கு மழை பற்றித் தெரியவில்லை எனச் சொல்லிச் சென்றாள். கோடைக் காலத்தின் மத்தியில் மழைக் கொண்டு வந்தாள் ஒருத்தி பெருமழை வேண்டுமா, உடல் நனைக்கப் போதுமா எனக் கேட்டாள் பெருமழையில் உடல் நனைக்கிறேன் என்றேன் நான். உனக்கு நனையத் தெரியவில்லை எனச் சொல்லிச் சென்றாள். மார்கழியின் குளிரில் …

மத்துறு…

கம்பராமாயணத்தை நம்ம படிக்க முடியாது. கம்பராமாயணம் பெரிய மனசு பண்ணா நம்ம கைக்கு அது வரும். எங்க அம்மா மேல எனக்கு அப்படி ஒரு பொறாமை இந்த விஷயத்துல உண்டு. எங்க ஊர்ல நெல்லைக் கண்ணன்னு ஒருத்தர் இருப்பார். இருக்கார். அவர் கம்பராமயணத்தைப் பத்திப் பேசினா கேட்டுட்டே இருக்கலாம். கம்பராமாயணம் அவர் சொல்லக் கேட்டா, அது மேல ஒரு பெரிய காதலே வந்திரும். எவ்வளவு அழகு. என்னைப் பொறுத்தவரைக்கும் எழுத்தாளனோ இல்லை கவிஞனோ இருந்தா, அவன் கம்பன் …

அன்னை மெஸ் – பாகம் 7

முந்தைய பதிவுகள். ஒரு வழியா இந்த ராஜா தாத்தா தொல்லை முடிஞ்சது. அதனால அப்பாவ அப்பப்ப மாத்தி விடுற வேலைகளை நானும் எங்க அண்ணனும் பண்ணிகிட்டு இருந்தோம். இது மணிக்கு கொஞ்சம் சாதகமா போயிருச்சு. எப்ப பாரு ஒரே ஜாலி தான் மனுஷன். பாட்டு பாடுறதென்ன, ஆடிகிட்டே பார்சல் கட்டுறதென்ன?. அப்பல்லாம் எப் எம் கிடையாது. நாங்க மெஸ்க்கு தனியா ஒரு வீடு, தங்க தனியா ஒரு வீடு எடுத்துட்டோம். அதனால, மெஸ்ல டீவி எல்லாம் கிடையாது. …