”கிருஷ்ணா.. ராமா கோவிந்தா. கிருஷ்ணா ராமா கோவிந்தா” வேனில் அமர்ந்திருந்த மூன்று பேர் சீரான இடைவெளியில் சொல்லிக் கொண்டே வந்தனர். கையில் இருந்த மாலையில் உள்ள பூக்களை பிய்த்து வெளியில் எறிந்து கொண்டு இருந்தேன். சிறிய வேனில் அளவுக்கதிகமான புகை. மேட்டடார் வேனின் டிரைவர் அருகில் இருக்கும் பகுதியில் ஒரு வயதான நபர் குத்தவைத்து அமர்ந்திருந்தார். வேன் கிளம்பி மூன்று நிமிடங்களில் என் மாலையின் அனைத்து பூக்களும் ரோட்டில் போட்டாகிவிட்டது. அடுத்த மாலையை எடுக்கவா வேண்டாமா என …
பொதுவா நவராத்திரி வந்துட்டாலே இங்க சென்னைல எல்லோரும் கல்கத்தாவுக்கோ, இல்லை மைசூருக்கோ கிளம்பிடுறாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நானும் எங்க அண்ணனும் அங்க தான் தசராக்கு இருந்தோம். ஆனா பாருங்க எந்த ஊரு தசரா பாத்தாலும் எங்க ஊர் தசரா மாதிரி வராது. எந்தத் திருநெல்வேலிக்காரனும் இதத்தான் சொல்லுவான். அதுலயும் டவுண்காரவுக “தேரோட்டம் மாதிரி வருமாவே”ம்பாவோ. பாளையங்கோட்டை தசரால ஒரு வித்தியாசம் உண்டு. இப்ப என்னவோ ஐபில் அது இதுங்காவோ, அதுக்கு முன்னாடியே தெருத் தெருவா பிரிஞ்சி, …
காலை காரை விட்டு இறங்கி வீட்டுக்கு வந்த உடனே ம்யூசிக் பிளேயர்ல ஷஃப்ஃபில் ஆப்ஷன்ல தும் ஹி ஹோ பாட்டு ஓட ஆரம்பிச்சது. எனக்கு எப்பவுமே சரியா இந்தி புரிஞ்சதில்லை. அரைகுறை தான். என்னவோ இந்தப் பாட்டுல முதல் வரியும் பாடியவர் பாடிய விதமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். சும்மா அதுக்காகவாச்சும் அப்போ அப்போ முதல் 30 செகண்ட் கேப்பேன் இந்தப் பாட்டை. அப்போதான் இன்னிக்கு எதோ ஒரு முக்கியமான நாள்லனு மனசுல தோணிகிட்டே இருந்துச்சு. தேதிகளை …
பாலை நிலத்தின் ஒரு பகுதி அதில் பகலை அறியாத ஒருவன் தனித்திருக்கும் ராத்திரிகளில் நினைவுகளிலேயே களித்திருந்தான். முன்னெப்போதோ மருத நிலத்தின் மழையில் மையல் கொண்டிருக்கையில் மயக்கத்துடன் நனைந்ததாய் நியாபகம் மழை நின்று போன பின்னும் மழை வாசனை போகாமல் காலம் கொடுத்த பாதையில் இன்று பாலையில் வந்து சேர்ந்திருந்தான். இரவில் பறக்கும் பருந்தை விரட்ட பாலையாழை மீட்டினான் விடலைகள் அலையும் நேரம் பாய் போட்டுத் தூங்கினான் பாலை நிலத்தில் மழை …
வசந்த காலத்தின் அந்தியில் மழை கொண்டு வந்தாள் ஒருத்தி சாரல் வேண்டுமா, மழை வாசனை போதுமா எனக் கேட்டாள் சாரல் மண்ணில் விழுந்தால் தானே வாசனை என்றேன் நான். உனக்கு மழை பற்றித் தெரியவில்லை எனச் சொல்லிச் சென்றாள். கோடைக் காலத்தின் மத்தியில் மழைக் கொண்டு வந்தாள் ஒருத்தி பெருமழை வேண்டுமா, உடல் நனைக்கப் போதுமா எனக் கேட்டாள் பெருமழையில் உடல் நனைக்கிறேன் என்றேன் நான். உனக்கு நனையத் தெரியவில்லை எனச் சொல்லிச் சென்றாள். மார்கழியின் குளிரில் …
மழை ஏன் எப்பொழுதும் என் மேல் விழ வேண்டும்? நான் மழையை ரசிக்கும் மழலைப் பருவத்தை தாண்டி விட்டேனே! மழை ஏன் எப்பொழுதும் என் மேல் விழ வேண்டும்? கரம் கோர்த்து நடக்க இன்று யாரும் இல்லையே! மழை ஏன் எப்பொழுதும் என் மேல் விழ வேண்டும்? வானம் பார்த்த விவசாயி நான் இல்லையே! மழை ஏன் எப்பொழுதும் என் மேல் விழ வேண்டும்? எனக்கு கவிதை கூட எழுத வராதே! மழை ஏன் எப்பொழுதும் என் …
கம்பராமாயணத்தை நம்ம படிக்க முடியாது. கம்பராமாயணம் பெரிய மனசு பண்ணா நம்ம கைக்கு அது வரும். எங்க அம்மா மேல எனக்கு அப்படி ஒரு பொறாமை இந்த விஷயத்துல உண்டு. எங்க ஊர்ல நெல்லைக் கண்ணன்னு ஒருத்தர் இருப்பார். இருக்கார். அவர் கம்பராமயணத்தைப் பத்திப் பேசினா கேட்டுட்டே இருக்கலாம். கம்பராமாயணம் அவர் சொல்லக் கேட்டா, அது மேல ஒரு பெரிய காதலே வந்திரும். எவ்வளவு அழகு. என்னைப் பொறுத்தவரைக்கும் எழுத்தாளனோ இல்லை கவிஞனோ இருந்தா, அவன் கம்பன் …
எல்லோர் வாழ்விலும் பெண்கள் இருக்கிறார்கள். அம்மாவாய், தங்கையாய், அக்காவாய், தோழியாய், மனைவியாய், இன்னும் பலவாக. அவ்வாறான பெண்களின் அனைத்துக் கூறுகளையும் நம்மால் அறிய முடியுமா? உதாரணமாக, என் தங்கையை எனக்கு தங்கையாய் மட்டுமே தெரியும். அவள் மணமான பின் எவ்வாறான மனைவியாய் இருப்பாள் எனவோ, இல்லை எப்படிப்பட்ட தோழியாய் இருப்பாள் எனவோ என்னால் முழுவதுமாக அறிய முடியாது. என்னதான் நான் நினைத்தாலும் அவளிடம் கேட்டறிந்தாலும் எதோ ஒன்று குறையும். அவ்வாறாக, ஒரு பெண்ணின் அனைத்துக் கூறுகளையும் பிரித்துக் …
முந்தைய பதிவுகள் அடுத்த வாரம் மெஸ்ஸே ஒரே பரபரப்பா இருந்தது. எப்பவும் சட்டையே இல்லாம் உக்காந்திருக்குற எங்க வெட்டு மாஸ்டர், அன்னைக்கு எழுபதுகள்ல பரபரப்பா இருந்த கழுத காது காலர் வெச்ச சட்டை போட்டிருந்தார். நம்ம மணிய பத்தி கேக்கவே தேவை இல்லை. சும்மாவே ஆள் மினுமினுப்பா இருப்பாப்புல, அன்னைக்கு அரை இஞ்ச் பவுடர் ஜாஸ்தியா இருந்தது. ரெண்டு நாள் கடை பக்கம் போகாம சுத்திட்டு காலைல கடைக்குப் போன எனக்கு இன்ப அதிர்ச்சி. என்னைக்குமில்லாம மணி …
முந்தைய பதிவுகள். ஒரு வழியா இந்த ராஜா தாத்தா தொல்லை முடிஞ்சது. அதனால அப்பாவ அப்பப்ப மாத்தி விடுற வேலைகளை நானும் எங்க அண்ணனும் பண்ணிகிட்டு இருந்தோம். இது மணிக்கு கொஞ்சம் சாதகமா போயிருச்சு. எப்ப பாரு ஒரே ஜாலி தான் மனுஷன். பாட்டு பாடுறதென்ன, ஆடிகிட்டே பார்சல் கட்டுறதென்ன?. அப்பல்லாம் எப் எம் கிடையாது. நாங்க மெஸ்க்கு தனியா ஒரு வீடு, தங்க தனியா ஒரு வீடு எடுத்துட்டோம். அதனால, மெஸ்ல டீவி எல்லாம் கிடையாது. …