கதை

மரணம்

”கிருஷ்ணா.. ராமா கோவிந்தா. கிருஷ்ணா ராமா கோவிந்தா” வேனில் அமர்ந்திருந்த மூன்று பேர் சீரான இடைவெளியில் சொல்லிக் கொண்டே வந்தனர். கையில் இருந்த மாலையில் உள்ள பூக்களை பிய்த்து வெளியில் எறிந்து கொண்டு இருந்தேன். சிறிய வேனில் அளவுக்கதிகமான புகை. மேட்டடார் வேனின் டிரைவர் அருகில் இருக்கும் பகுதியில் ஒரு வயதான நபர் குத்தவைத்து அமர்ந்திருந்தார். வேன் கிளம்பி மூன்று நிமிடங்களில் என் மாலையின் அனைத்து பூக்களும் ரோட்டில் போட்டாகிவிட்டது. அடுத்த மாலையை எடுக்கவா வேண்டாமா என …

காதலின் நாற்பது விதிகள் – புத்தக அறிமுகம்

எலிஃப் ஷஃபக் எழுதிய காதலின் நாற்பது விதிகள் சமீபத்தில் வாசித்த நூல்களில் தனித்து நின்றது. நம்ம ஊர் மட்டுமல்லாமல், வெளிநாட்டுக் காதல் புனிதங்களும் ஒரு வகையான டெம்ப்ளேட்டிலேயே அமைக்கப்பட்டிருக்கும். முக்கியமாக நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ். எல்லோருக்கும் பதின்ம வயதில் தபூ சங்கர் கவிதைகள் பிடித்திருக்கும். பின்னால் அறிவுமதி, மேத்தா என வளர்ந்து வந்து விடுவோம். நிக்கோலஸ் ஸ்பார்க்ஸும் அதைப் போலத்தான். இப்புதினத்தில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் என்னவென்றால், காதலை பலப்பலக் கோணங்களில் சொன்ன ரூமிக்கு, காதலை உணர்த்திய …

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – விமர்சனமல்ல

மேட்டிமைத்தனமும் பன்னாட்டு வணிக சினிமா கம்பெனிகளும் தரமான படைப்புகளைக் கொல்கிறதா?

தி ஸ்நோமேன் – யூ நெஸ்போ – நூல் அறிமுகம்.

    குற்றப்புனைவுகளில் ஸ்கேண்டிநேவியன் நாவல்களை அடிக்க ஆள் இல்லை என்று பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது நிரூபணமாவது உண்டு. வாலாண்டர் தொடர்கள், அதற்கு முன் மார்ட்டின் பெக் என அவர்கள் படைத்த பாத்திரங்கள் ஏராளம். சமீபத்தில் அங்கு பிரபலமாக பேசப்பட்டுக் கொண்டிருப்பவர் யூ நெஸ்போ (Jo Nesbo). அவரது ஹாரி ஹோலே கதாபாத்திரம் மிகவும் பிரபலம். குடிப்பிரச்சினை உள்ள ஒரு போலீஸ் அதிகாரி. பல இடங்களில் டர்டி ஹாரியை நினைவுபடுத்தும் ஒரு பாத்திரம். யாருக்கும் அடங்காத, …

காசி நாடனும் கிராமியப் பாடலும்

காரின் குளிரில் பாதங்கள் விரைத்து விட்டன. பயணத்தில் படிக்க எனக் கொண்டு வந்திருந்த புத்தகங்கள் வீட்டில் இருந்து எடுத்து வந்த மாதிரியே இருந்தன. ஒரு பக்கம் கூட புரட்டவில்லை. காரில் ஏறியவுடன் அப்படி ஒரு தூக்கம். இப்படிப்பட்ட காரில் எல்லாம் நம்மையும் ஏற்றிக் கொள்வார்களா என பள்ளிக் காலத்தில் காரின் பின் ஓடியதெல்லாம் நினைவுக்கு வந்தது. ”அதெல்லாம் மறந்துடு. சாதிச்சாச்சு” மனசு சொல்லியது. இல்லை.. இன்னும் ஒரே ஒரு படி. புன்னைவயல் கிராமத்தில் கார் திரும்பிய பொழுது …

சுமித்ரா – ஒரு புதிய வாசிப்பனுபவம்.

எல்லோர் வாழ்விலும் பெண்கள் இருக்கிறார்கள். அம்மாவாய், தங்கையாய், அக்காவாய், தோழியாய், மனைவியாய், இன்னும் பலவாக. அவ்வாறான பெண்களின் அனைத்துக் கூறுகளையும் நம்மால் அறிய முடியுமா? உதாரணமாக, என் தங்கையை எனக்கு தங்கையாய் மட்டுமே தெரியும். அவள் மணமான பின் எவ்வாறான மனைவியாய் இருப்பாள் எனவோ, இல்லை எப்படிப்பட்ட தோழியாய் இருப்பாள் எனவோ என்னால் முழுவதுமாக அறிய முடியாது. என்னதான் நான் நினைத்தாலும் அவளிடம் கேட்டறிந்தாலும் எதோ ஒன்று குறையும். அவ்வாறாக, ஒரு பெண்ணின் அனைத்துக் கூறுகளையும் பிரித்துக் …

அன்னை மெஸ் – பாகம் 8

முந்தைய பதிவுகள் அடுத்த வாரம் மெஸ்ஸே ஒரே பரபரப்பா இருந்தது. எப்பவும் சட்டையே இல்லாம் உக்காந்திருக்குற எங்க வெட்டு மாஸ்டர், அன்னைக்கு எழுபதுகள்ல பரபரப்பா இருந்த கழுத காது காலர் வெச்ச சட்டை போட்டிருந்தார். நம்ம மணிய பத்தி கேக்கவே தேவை இல்லை. சும்மாவே ஆள் மினுமினுப்பா இருப்பாப்புல, அன்னைக்கு அரை இஞ்ச் பவுடர் ஜாஸ்தியா இருந்தது. ரெண்டு நாள் கடை பக்கம் போகாம சுத்திட்டு காலைல கடைக்குப் போன எனக்கு இன்ப அதிர்ச்சி. என்னைக்குமில்லாம மணி …

அன்னை மெஸ் – பாகம் 7

முந்தைய பதிவுகள். ஒரு வழியா இந்த ராஜா தாத்தா தொல்லை முடிஞ்சது. அதனால அப்பாவ அப்பப்ப மாத்தி விடுற வேலைகளை நானும் எங்க அண்ணனும் பண்ணிகிட்டு இருந்தோம். இது மணிக்கு கொஞ்சம் சாதகமா போயிருச்சு. எப்ப பாரு ஒரே ஜாலி தான் மனுஷன். பாட்டு பாடுறதென்ன, ஆடிகிட்டே பார்சல் கட்டுறதென்ன?. அப்பல்லாம் எப் எம் கிடையாது. நாங்க மெஸ்க்கு தனியா ஒரு வீடு, தங்க தனியா ஒரு வீடு எடுத்துட்டோம். அதனால, மெஸ்ல டீவி எல்லாம் கிடையாது. …

அன்னை மெஸ் – பாகம் 5

முந்தைய இடுகைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் (கிளிக்கவும்னு போட்டதுக்கு விளக்கம் எல்லாம் சொல்ல வேண்டியதா போச்சு ;-)) திருநெல்வேலில ரொம்ப விசேஷமான சாப்பாட்டு ஐட்டம்ல சொதிக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கு. திருநெல்வேலி சைவப் பிள்ளைமார் வகுப்பை சேந்தவுங்க, இதை கல்யாணத்துக்கு மறுநாள் நடக்குற மறுவீட்டு விருந்துல கண்டிப்பா பண்ணுவாங்க. ரொம்ப நல்லா இருக்கும். திருநெல்வேலில இருந்து வந்த முக்கியமான எழுத்தாளர்கள் எல்லாருமே சொதி பத்தி எழுதிருப்பாங்க. என்னன்னா, கேரட், பீன்ஸ், உருளைக் கிழங்கு, முருங்கைக்காய், …

அன்னை மெஸ் – பாகம் 4

முந்தைய பதிவுகளை படிக்க இங்கே கிளிக்கவும் அடுத்து நடந்த விஷயங்கள் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. அப்பா அம்மாவ எப்படியும் சமாளிச்சுடலாம்னு நினைச்சேன். அண்ணன் களத்துல இறங்கின பிறகு அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஆர்டீஓ ஆபீஸ் பக்கத்துலயே ஒரு வீடு பாத்தாச்சு கடை போட. நாங்க தங்க தனியா இரு வீடு. நான் ஒருத்தன் மட்டும் தான் எதிர்ப்பு. ஒரு பருப்பும் வேகலை. அங்க நாங்க தங்கப் போன வீடப் பாத்த உடனே தான் எனக்கு கொஞ்சம் …