Month: October 2014

மரணம்

”கிருஷ்ணா.. ராமா கோவிந்தா. கிருஷ்ணா ராமா கோவிந்தா” வேனில் அமர்ந்திருந்த மூன்று பேர் சீரான இடைவெளியில் சொல்லிக் கொண்டே வந்தனர். கையில் இருந்த மாலையில் உள்ள பூக்களை பிய்த்து வெளியில் எறிந்து கொண்டு இருந்தேன். சிறிய வேனில் அளவுக்கதிகமான புகை. மேட்டடார் வேனின் டிரைவர் அருகில் இருக்கும் பகுதியில் ஒரு வயதான நபர் குத்தவைத்து அமர்ந்திருந்தார். வேன் கிளம்பி மூன்று நிமிடங்களில் என் மாலையின் அனைத்து பூக்களும் ரோட்டில் போட்டாகிவிட்டது. அடுத்த மாலையை எடுக்கவா வேண்டாமா என …