முகலாய மன்னர்களிலேயே எனக்கு பிடித்த பிடிக்காதவர் இவர்தான். காந்தியைப் போல ஹிட்லரைப் போல, ஒரு வரைமுறைக்குள் உட்படாதவர். லவ் ஃபெயிலியர் பார்ட்டி. அதுக்கப்புறம் ஆசைக்காக கல்யாணம் பண்ணிக்காம கடமைக்காக பண்ணியவர். மது அருந்தாதவர். இந்தியாவில் முதன் முதலா மூக்கு கண்ணாடி போட்டப் பெருமைக்குரியவர். முகலாயப் பேரரசின் கடைசி சொல்லிக் கொள்ளும்படியான ராஜா.
என்னதான் இருந்தாலும் கலை மேலயும் கலைஞர்கள் மேலயும் தலைவருக்கு இருந்த வெறுப்பு தான் ஹைலைட். மனுஷனுக்கு சுத்தமா பிடிக்காது. பாட்டு பாடினவன், சிலை செதுக்குனவன எல்லாம் செதுக்கி எடுத்துட்டாப்புல. கலை மேல நாட்டமே இல்லாம ஒரு மனுஷனால இருக்க முடியுமா? ஒரு வேளை அப்படி இருந்தா என்ன காரணமா இருக்கும்? எந்தக் கலையுமே சலனம் ஏற்படுத்தாத அந்த மனசு எவ்வளவு ரணப்பட்டு இருக்கும்?
சில நேரங்கள்ல முகலாய சாம்ராஜ்யம் மாதிரி சாபம் வாங்கின சாம்ராஜ்யம் எதுவுமே இல்லைனு தோணும். அப்புறம் கிரேக்க புராணங்கள் படிச்சா அந்த எண்ணம் போயிரும். அம்மாவையும், அப்பாவையும் தம்பியையும் நம்பி கட்டிப்பிடிக்க முடியாட்டி, உலகமே சொந்தமா இருந்தா என்ன? இல்லாட்டி என்ன? சாபம் வாங்கின ஒரு பிறவி. ஆனா வரலாற்றுல அழிக்க முடியாத பல தடங்களை பதிச்சவர் இந்த ஔரங்ககீப்.
சில நேரங்கள்ல, நம்ம வரலாற்றுப் பாடங்கள் வெறும் வருஷங்களைப் பட்டியலிடும் ஒரு புத்தகமாயிடுச்சோனு எனக்கு ரொம்ப கவலையாயிருக்கு. இந்த மாதிரி மனுஷங்க எல்லாம் நம்ம நாட்டுல இருந்திருக்காங்க. இவனே இங்கிலாந்துல பொறந்திருந்தா ஷேக்ஸ்பியர் இவனைப் பத்தி ஒரு சோக நாடகம் எழுதியிருப்பார். நம்ம நாட்டுல சில நாயகர்களை மட்டுமில்ல பல வில்லன்களையும் மதிக்குறதில்லை. நமக்குத் தேவை ஒரு பொழுதுபோக்கு. அதுக்கு இருக்கவே இருக்கார் துக்ளக்.
என்னமோ போங்க மக்களே.
Comments
வணக்கமுங்க
ஓள்ரங்கசெப் மாட்டிக்கிட்டார், ஆமாம்…… ஆசையில்லாமல் கடைமைக்காக கலியாணம் கட்டிகிட்டார்னு ( மோடி மாதிரி!!!! ) யாருங்க சொன்னது?. ஊரான் வீட்டு காசுலே பொண்டாடிக்கு நினைவு சின்னம் கட்டினதுக்கு தாங்க அப்பன ஜெயில்ல போட்டாராம். அரசியல்ல, கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லனும்னா, நம்ம ஜே. , மு.க., இவங்களுக்கெல்லாம், அவரு மாதிரி வானளாவிய அதிகாரம் இருந்தால், சசிகலா குடும்பத்துக்கும், அஞ்சாநெஞ்சர் போன்றவர்களுக்கும் என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள். கண்ணாடி வரவழைத்து போட்டவருக்கு, வெளிநாட்டு சரக்கு வாங்கி அடிக்கமுடியாதா? ஏன் செய்யலே ? ஒங்களுக்கு யோசனை வரலையா?. கோயிலுக்கெல்லாம் நிலம் குடுத்தார்ன்னு வேற சொல்றாங்களே!!!. நீங்க கேள்விப்படலையா?.
ஐயா ராசா, வெள்ளைக்காரன், நமக்கு ஒரு கண்ணு போனாலும் அடுத்தவனுக்கு ரெண்டு கண்ணும் போகணும் என்கிற நல்ல எண்ணத்திலே செய்திகளை திரிச்சு எழுதிட்டு போய்ட்டான்யா. என்னததே சொல்றது………. படிச்சவனும் அப்படிதான் இருக்கான், பாமரநும் அப்பிடித்தான் இருக்கான்……
கடவுளே இந்த தேசத்தை காப்பாத்து
வணக்கம்! நீங்க சரியா என்ன சொல்ல வரீங்கனு புரியலை.. நான் சொன்னதையேதான் நீங்களும் சொல்றீங்களா? சரி அப்படியே வெள்ளைக்காரன் திரிச்சு எழுதிட்டுப் போனாலும், உண்மை என்னனு நமக்கு எப்படித் தெரியும்.. காலசக்கரத்துல பின்னால போய் பாக்க முடியுமா? சரி என்னதான் சொல்ல வரீங்கனு சுருக்கமா, புரியுற மாதிரி சொல்ல முடியுமா?
நான் படித்த வரை, மக்கள் பணத்தை ஊதாரித்தனமாகத் தாஜ்மஹாலில் செலவு செய்ததற்காக தந்தையையே சிறையிட்டவர். தனது குல்லாவை தானே தைத்துக் கொண்டவர். எளிமையின், நேர்மையின் சிகரம்.
ஒரே தவறு, அன்பென்ற வார்த்தையை அறியாதவர்.
கோபாலன்
அதைத் தவறு என்று சொல்வதா? இல்லை விதி என்று சொல்வதா? இல்லை இயல்பு என்று சொல்வதா? தெரியலை.