காதலிக்க நேரமில்லை படத்துல நாகேஷோட படக்கம்பெனி பேர் இது. படம் எடுக்குறோம் எடுக்குறோம்னு சொல்லுவாரு கடைசி வரைக்கும் படம் எடுக்கவே மாட்டார். ஆனா அவர் பண்ணுற தமாஷ் எல்லாம் ரொம்ப பிரபலம். எனக்கும் ரொம்பப் பிடிச்ச படம். இப்போ எதுக்கு இதை சொல்றேன்னா… எனக்கும் தெரிஞ்சு ஏகப்பட்ட ஓஹோ புரொடக்ஷன்ஸ் இருக்கு.
எல்லாம் இந்த நாளைய இயக்குனர் பண்ணுற வேலை. என் கூட சுத்துற பல பேர் குறும்படம் எடுக்குறேன்னு சொல்லிட்டு திரியுறாங்க. ரெண்டு மூணு பேர் எடுக்கவும் செஞ்சுட்டாங்க. என்னோட முயற்சி தான் பாதியிலேயே நிக்குது.. எப்பவும் போல. அதுலயும் நான் எழுதின ஒரு கதை படுற பாடு இருக்கே. அந்தக் கதைய எழுதி மூணு வருஷம் ஆச்சு, அப்போல இருந்து இப்போ வரைக்கும் நானும் எடுக்கணும் எடுக்கணும்னு பாக்குறேன் முடிய மாட்டேங்குது.
என்ன பிரச்சினைனா, கதையில ஒரு அழகான பொண்ணு வரணும். ரொம்ப கஷ்டம். அதுலயும் நமக்குத் தெரிஞ்ச பொண்ணுங்களுக்கு நடிக்க விருப்பமில்லை. நடிக்கத் தெரிஞ்ச பொண்ணுங்களை நமக்குத் தெரியலை. காசு குடுத்து யாரையாச்சும் நடிக்க வைக்கலாம்னு பாத்தா காசில்லை. கேமராவும் மற்ற உபகரணங்களையும் நமக்கு ஒரு அளவுக்குத் தான் கையாளத் தெரியும். தெரிஞ்ச வரைக்கும் சொதப்பி நடிக்க வந்தப் பொண்ணைத் திரும்பத் திரும்ப வரச் சொல்றதும் அவ்வளவு நல்லா இருக்காது.
அதோட கொடுமை என்னன்னா, என்னால கதைல தெளிவா சொல்ல முடிஞ்ச அளவுக்கு நடிக்குறவங்ககிட்ட சொல்ல முடியுமானும் தெரியலை. ஆனா இந்த வருஷத்துக்குள்ள கண்டிப்பா அந்தக் கதைய எடுக்கணும்னு மட்டும் தோணுது.
வாழ்த்துக்கள் சொல்லுங்க மக்களே.. உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்.
Comments
Atleast you wrote a story.. I yet to wrote a story.. so storylaye ponnu ilama eluthalaam nu irukken.