(தவறான ளகரத்துக்காக யாரும் கோவிக்க வேண்டாம். பேச்சு வழக்கை கொண்டு வர்றதுக்காகத்தான் அப்படி எழுதிருக்கேன்)
எளவு வீடு ஒரு மாதிரியா இருக்கும் எனக்கு. யாராச்சும் இறந்து போயிட்டாங்கனா, அவங்களை கிடத்தி வெச்சிருக்குற இடத்துல சில விநாடிகளுக்கு மேல நான் இருக்கவே மாட்டேன். சொந்தக்காரங்கனா”இவன் வந்திருக்கான் பாரு, அவன் வந்திருக்கான் பாரு”னு இறந்தவங்களைப் பார்த்து அழ ஆரம்பிச்சுடுவாங்க. நமக்கு என்ன சொல்றதுன்னே தெரியாது. ஆனா அங்க கூட சில அழகியல் விஷயங்கள் இருக்கும். நமக்குப் பாக்கத் தெரிஞ்சா. மரணம், எளவு வீட்டப் பத்தி சுமித்ரா நாவல்ல கல்பெட்டா நாரயணன் எழுதின மாதிரி யாராலயும் சொல்ல முடியுமானு தெரியலை.
”அன்பு செலுத்துபவர்கள் இன்னும் பெரிய அன்பின் அலைகள் நெஞ்சில் எழுவதை உணர்வார்கள். மரண வீட்டின் நிகழ்வுகள் அழுத்தமானவை. அங்கு கடன் கேட்டுப் பாருங்கள் கிடைப்பதற்கு சாத்தியங்கள் அதிகம். தவறு செய்தவர்களின் தவறுகளின் சுமை ஏறும். மரண வீடு பிரமாண்டமானதொரு பின்புலம். மரண வீட்டின் சுவர்களில் மோனோலிசாவின் புன்னகை மேலும் மர்மமாக பரவி வருவதை தெளிவாகப் பார்க்கலாம். மரணம் நமக்கு பல விஷயங்களை அழுத்திச் சொல்கிறது.”
ஏனோ எவ்வளவு நெருங்கின சொந்தம் இறந்தாலும் எனக்கு அழுகை மட்டும் வரவே வராது. சில நேரங்கள்ல அழுறவங்களைப் பார்த்து எரிச்சலாக் கூட வரும். எங்கயாச்சும் எழுந்து போயிடலாமானு பாத்துட்டே இருப்பேன். சில நேரங்கள்ல செத்தவங்களுக்கு செய்யுற அவமரியாதையோனு கூட எனக்கு பயமாயிருக்கும். ஆனா என்ன பண்ணுறது எளவு வீட்டுல மட்டும் மனசு ஒரு பக்கம் நிக்காம அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிகிட்டேல்லா இருக்கு. தெரிஞ்சோ தெரியாமலயோ எங்க ரெண்டு அத்தை இறந்தப்போ நான் அவங்க கூட இருந்தேன். ரெண்டு பேரும் வீட்டை கோயில் மாதிரி வெச்சுகிட்டவங்க. அவங்க எனக்கு கத்துக்குடுத்தது ஏராளம். அவங்க இறந்ததும் உடல் தான்ம் பண்ணக் ஆம்புலன்ஸ்ல ஏத்திட்டுப் போனோம். அரசு ஆஸ்பத்திரில அட்டெண்டர் “பாடி வந்திருச்சா”னு கேட்டார். இருக்கும் போது எத்தனை பேர் வெச்சுக் கூப்பிட்டாலும், செத்தா எல்லாரும் பாடி தான? விட்டை எப்படித்தான் கோயில் மாதிரி வெச்சிருந்தாலும் அந்த ரெண்டு நாளைக்கு வீடு எளவு வீடு தான.
அம்புட்டுதேன் வாழ்க்கை. அதுக்கு அதைக் கொண்டா, இதைக் கொண்டானு சண்டை வேற. இதையெல்லாம் நிதம் பாத்தாக்கூட நம்ம திருந்தவாப் போறோம்?
Comments
Teaches us a lesson on reality nah …
கண்டிப்பா..
Very true prasanna . ithai nanum romba anubavichiruken
மரண வீடுகளின் அவதானிப்புகள் யாரையும் விட்டு வைப்பதில்லை.