சில பாட்டு கேக்கும்போது தான் இந்த வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் தெரியுது. பாடல் விமர்சனம் எல்லாம் பெரிய விஷயம். அதுலயும் இளையராஜா பாட்டெல்லாம் விமர்சனம் பண்ற அளவுக்கு நமக்கு விஷய ஞானம் பத்தாது. ஆனா இந்தப் பாட்டுல ஒவ்வொரு நிமிஷமும், அது மவுனமா இருந்தாக் கூட ஒரு மாதிரியான அமைதியை மனசுக்கு குடுக்கும்.
ரொம்ப அருமையா படமாக்கப்பட்ட, இசையமைக்கப்பட்ட, நடிக்கப்பட்ட பாடல்கள்ல இதுவும் ஒண்ணு. அதுலயும் குறிப்பா பல்லவில எஸ்.பி.பி பாட ஆரம்பிக்கும்போது கமல் ஒரு ரியாக்ஷன் குடுப்பார் பாருங்க. அதுக்கு ஒரு செகண்டு முன்னாடி அந்தம்மா ஒரு ரியாக்ஷன் குடுக்கும். எனக்குத் தெரிஞ்சு அது தெலுங்கு பொண்ணுங்களால மட்டுமே பண்ணக்கூடிய விஷயம் அது. ஒரு பார்வை.. ஒரு ஜெர்க். அவ்வளவுதான். நம்ம பனால் ஆகிடுவோம்.
சிலது சிற்றின்பம், சிலது பேரின்பம். இந்தப் பாட்டு மட்டும் காதுல கேட்கும் போதெல்லாம் தீண்டும் இன்பம்.
Comments
Nice… ana naan unnoda theme sounds nu nenachen … adade madhiri edha irukkum nu 😉
நாமெல்லாம் ஒரு வட்டத்துக்குள்ள அடங்கிருவமா என்ன?