Month: April 2014

ஆய்தம் மிக முக்கியமான ஒரு தமிழ் எழுத்து. பிற மொழிகளில் இதை இல்லை என சொல்ல முடியாது. ஆனால் இதன் மாறுபட்ட உபயோகங்கள் தமிழ் எவ்வளவு முழுமையான ஒரு மொழி என்பதை அழுத்திச் சொல்லும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி எழுதப்பட்ட இலக்கண நூலான தொல்காப்பியத்தில், ”ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய், ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” அப்படின்னு சொல்லிருக்கு. அதாவது இந்த எழுத்துக்கு பின்னாடி வர்ற வல்லினத்தை மேற்கண்ட ஒலியமைப்புகளில் நுணுக்க ஆய்தம் பயன்பட்டிருக்கணும்.  இதை கேடயத்தில் …

ஔரங்கசீப்

முகலாய மன்னர்களிலேயே எனக்கு பிடித்த பிடிக்காதவர் இவர்தான். காந்தியைப் போல ஹிட்லரைப் போல, ஒரு வரைமுறைக்குள் உட்படாதவர். லவ் ஃபெயிலியர் பார்ட்டி. அதுக்கப்புறம் ஆசைக்காக கல்யாணம் பண்ணிக்காம கடமைக்காக பண்ணியவர். மது அருந்தாதவர். இந்தியாவில் முதன் முதலா மூக்கு கண்ணாடி போட்டப் பெருமைக்குரியவர். முகலாயப் பேரரசின் கடைசி சொல்லிக் கொள்ளும்படியான ராஜா. என்னதான் இருந்தாலும் கலை மேலயும் கலைஞர்கள் மேலயும் தலைவருக்கு இருந்த வெறுப்பு தான் ஹைலைட். மனுஷனுக்கு சுத்தமா பிடிக்காது. பாட்டு பாடினவன், சிலை செதுக்குனவன …

ஓஹோ புரொடக்‌ஷன்ஸ்

காதலிக்க நேரமில்லை படத்துல நாகேஷோட படக்கம்பெனி பேர் இது. படம் எடுக்குறோம் எடுக்குறோம்னு சொல்லுவாரு கடைசி வரைக்கும் படம் எடுக்கவே மாட்டார். ஆனா அவர் பண்ணுற தமாஷ் எல்லாம் ரொம்ப பிரபலம். எனக்கும் ரொம்பப் பிடிச்ச படம். இப்போ எதுக்கு இதை சொல்றேன்னா… எனக்கும் தெரிஞ்சு ஏகப்பட்ட ஓஹோ புரொடக்‌ஷன்ஸ் இருக்கு. எல்லாம் இந்த நாளைய இயக்குனர் பண்ணுற வேலை. என் கூட சுத்துற பல பேர் குறும்படம் எடுக்குறேன்னு சொல்லிட்டு திரியுறாங்க. ரெண்டு மூணு பேர் …

ஒருமைப்பாடு

சின்ன வயசுல ஒருமைப்பாட பத்தி ஒரு பாடு கிளாஸ் எடுப்பாங்க. அதோட உண்மையான அர்த்தம் தமிழ்நாட்டுல ரெண்டு இடத்துல மட்டும்தான் இருக்கு. ஒண்ணு சினிமா தியேட்டர்.. இன்னொண்ணு டாஸ்மாக். டாஸ்மாக் பத்தி எல்லாம் எழுதி தீர்த்துட்டதால, நம்ம சினிமா தியேட்டர் பத்தி பாப்போம். கழுதை கெட்டா குட்டிச் சுவரு.. நான் கெட்டா திருநெல்வேலிதான். தடுக்கி விழுந்தா தியேட்டர் அப்படிங்குறதுக்கு எங்க ஊர் ஒரு உதாரணமா சொல்லலாம். சில தியேட்டரெல்லாம் எங்கப்பா ஸ்கூல் படிக்கும் போதுல இருந்து இருக்கு. …

ஐரோப்பா, தமிழ்நாடு மற்றும் பிற ஊர்களுக்கு…

  ரொம்ப நாளா இந்த மாதிரி புத்தகம் வாங்கணும்னு ஆசை. புத்தகம் வர்றதுக்கு முன்னாடியே அவுட்லுக் ட்ராவலர்ல இந்தப் புத்தகத்தோட ஒரு பகுதி வந்துடுச்சு. படிச்சுப் பாத்து அன்னிக்கே முடிவு பண்ணது வாங்கணும்னு. இப்போதான் அமைஞ்சது. ஸ்கூல்ல வாத்தியாருங்க கூட பிக்னிக் போன அனுபவம் நம்ம எல்லோருக்குமே இருக்கும். அங்க போகாத, இங்கப் போகாத, அங்க நிக்காதனு அவங்க பண்ணுற அலப்பறையே ஒரு தினுசா இருக்கும். படிச்சு முடிச்சு சம்பாதிக்க ஆரம்பிச்சு, அடுத்த ஊருக்கு பஸ் இத்தனை …

ஏமாற்றம்

சில நாட்கள் நான் உன் கண்களில் தொலைந்திருந்தேன். அந்த அழகிய கரு உலகத்தில் எனக்கான வெளிச்சங்கள் எனக்கே எனக்கு மட்டுமான உலகம் நமக்கே நமக்கு மட்டுமான கனவுகளுடன்.   நீ சிரிக்கையில் உன் இதழுக்கு முன் உன் கண்கள் சிரிக்கும் நீ என் கண் பார்த்துப் பேசுவது எனக்கு பிடிக்கிறது என்றாய் யசோதைக்குப் பின் உலகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதைத் தவிர வேறு எதைப் பார்க்கத் தோன்றும்.   என் பிறந்தநாளுக்கு  திடீரென சென்னை வந்து …

எளவு!

(தவறான ளகரத்துக்காக யாரும் கோவிக்க வேண்டாம். பேச்சு வழக்கை கொண்டு வர்றதுக்காகத்தான் அப்படி எழுதிருக்கேன்) எளவு வீடு ஒரு மாதிரியா இருக்கும் எனக்கு. யாராச்சும் இறந்து போயிட்டாங்கனா, அவங்களை கிடத்தி வெச்சிருக்குற இடத்துல சில விநாடிகளுக்கு மேல நான் இருக்கவே மாட்டேன். சொந்தக்காரங்கனா”இவன் வந்திருக்கான் பாரு, அவன் வந்திருக்கான் பாரு”னு இறந்தவங்களைப் பார்த்து அழ ஆரம்பிச்சுடுவாங்க. நமக்கு என்ன சொல்றதுன்னே தெரியாது. ஆனா அங்க கூட சில அழகியல் விஷயங்கள் இருக்கும். நமக்குப் பாக்கத் தெரிஞ்சா. மரணம், …

ஊர் பாசம்

அது நம்ம நாட்டுக்கு மட்டும் உண்டா, இல்லை உலகம் பூராவே அப்படியானு தெரியலை. எங்கியாச்சும் நம்ம ஊர் பசங்களைப் பாத்தா வரும் பாருங்க ஒரு பாசம். அது மாதிரி ஒரு உணர்வு தாய்ப்பாசத்துக்குத் தவிர வேற எதுக்கும் இருக்கானு தெரியலை. பிறக்க ஒரு ஊர்; பிழைக்க ஒரு ஊர். இந்த விதிக்கு ஆளாகதவங்க மட்டும் தான் வாழ்க்கைல புண்ணியம் பண்ணவங்கனு நான் அடிச்சு சொல்லுவேன். பொறந்து, படிச்சு, விளையாடி, தெருப்பொறுக்கி, வெளியூர்ல இருந்து வர்ற சொந்தக்காரங்களுக்கு சுத்திக்காமிச்சு, …

உலக்கை

திருநெல்வேலில பட்டிமன்றங்கள் ரொம்ப பிரபலம். 1992-1998 வரைக்கும் எங்கம்மா நிறைய பட்டிமன்றத்துல பேசுவாங்க. இப்போ டிவில போடுற பட்டிமன்றம் மாதிரி எல்லாம் இருக்காது. “கம்பராமாயணத்தில் சிறந்த பாத்திரம், குகன் இல்லை அனுமன்” சிலப்பத்திகாரத்தின் சிறந்தப் பெண் பாத்திரம் கண்ணகியா மாதவியானு எல்லாம் பயங்கரமா இருக்கும். அப்போ இதைப் பத்தி எல்லாம் மணிக்கணக்கா பேச ஆள் இருந்தாங்க. இப்ப பேச ஆள் இருந்தாலும் கேக்க ஆள் இருக்கானு தெரியலை. எங்க ஊர் பக்கம் பேசுறவங்கள்ல கணபதி சுப்பிரமணியம்னு ஒரு …