ரயில் பயணங்களில்…..

எனக்கு எப்பவுமே ரயில் பயணங்கள் பிடிக்கும். பொதுவா இரண்டாம் வகுப்பு பெட்டில பொறவன் அந்த தடவை கொழுப்பெடுத்து போய், 2ன்ட் ஏ.சி. டிக்கட் எடுத்து இருந்தேன். ஒரு ஆசைதான் எப்படி இருக்கும் அதுல போனா அப்படின்னு. பெருசா கற்பனை பண்ணிட்டு தான் போனேன், ஆனா அங்க ஒண்ணுமேயில்ல.. எனக்கு சப்புனு ஆகிப் போச்சு.
பொதுவா நான் போகும் போது, “தம்பி எனக்கு முட்டி வலி, நீங்க அப்பர் பெர்த் எடுத்துகுறீங்களா??? பெட்டி யாருதுங்க?? சாயா, டீ”
இதெல்லாம் கேட்டு கேட்டு பழகிடுச்சா, இதெல்லாம் இல்லாதப்போ நம்ம ஏதோ தப்பு பண்ணிட்டோம்னே தோணிச்சு.
மத்தபடி நான் யார்கிட்டனாலும் உடனே பேசிடுவேன். 2ன்ட் கிளாஸ், ஸ்லீப்பர் கோச்ல எல்லாம் யாரையும் விட்டதில்ல எல்லார் கிட்டயும் பேசிடுவேன். உடன் டிக்கட்னா இன்னும் குஷிதான். அப்படி இருந்தநான், இந்த ஏ.சி ல வந்து தனியா மாட்டிகிட்டேன். ஜன்னல் பக்கம் ஒரு பெருசு உக்காந்து இருந்தாப்ல. பேசலாம்னு போகும் போதே பெரிய இங்கிலீசு புஸ்தகம் ஒண்ண திறந்து வெச்சுட்டார்.. நான் பாக்காத இங்க்லீஷா?? உடனே அண்ணா நகர்ல பேரம் பேசி 40 ரூவாய்க்கு வாங்கின டிஸ்ப்ஷன் பாயிண்ட் எடுத்து படிக்க ஆரம்பிச்சுட்டேன். அப்பதான் அவன் உள்ளார வந்தான்.
ஆள் பாக்க நீசத்தனமாதன் இருந்ததான். என்ன என்னை விட கொஞ்சம் குள்ளம். பரவாயில்ல விடுங்க.
“ஹாய்”
“ஹாய்”
“நீங்க எங்க திருவனந்தபுரம் போறீங்களா??”
“இல்லைங்க! திருநெல்வேலில இறங்கிடுவேன், நீங்க?”
“எனக்கு திருச்சிதான். சென்னைல ராணா வால்வ்ஸ் இருக்குல்ல அங்கதான் சீனியர் இஞ்சினியரா இருக்கேன். நீங்க?”
“நான் வெட்டிதான்”
“பாத்தா அப்படி தெரியலையே??”
“உங்கள பாத்தா கூட தன் இஞ்சினியர் மாதிரி தெரியலை, நான் எதுனா கேட்டனா?”
“கோவப்படாதீங்க சார்”
“இந்த சார் மோர் எல்லாம் வேணாம், நான் பிரசன்னா”
“நான் கார்த்திகேயன், சுருக்கமா மைக்”
“எப்படியா கார்த்திகேயன சுருக்கினா மைக் வரும்”
“அது நானே எனக்கு வெச்சுகிட்ட பேர்”
நல்லா வைக்குறீங்கடா மைக், ஸ்பீக்கர்னு பேர. கொஞ்ச நேரம் அந்த புக்கையே பாத்துகிட்டு இருந்தேன். ஒரு எழவும் புரியல, வீட்ல போய் அகராதி வெச்சு படிக்கணும்.
“என்னங்க அமைதி ஆகிட்டீங்க, நான் ரொம்ப போர் அடிக்குறேனா”
“இதுக்கு நான் பதிலா உண்மை சொல்லணுமா பொய் சொல்லணுமா?”
“நீங்க பதிலே சொல்ல வேண்டாம், என் வீக்னஸ் அதான் இப்படி எல்லாம் வாங்கி கட்டிக்க வேண்டி இருக்கு..”
“அப்படி என்ன வீக்னஸ்?”
“வேண்டாம் விடுங்க பிரசன்னா”
“இல்ல சொல்லுங்க”
“நான் எப்பவுமே இந்த ட்ரெயின்ல தான் ஊருக்கு போவேன். திருச்சி அப்படிங்குறதால நைட் 2 மணிக்கு ஸ்டேஷன் வரும். சரியா தூங்க முடியாது. ஒரு தடவை இதே மாதிரி தான் யாரும் இல்லாத கம்பார்ட்மெண்ட்ல போய்கிட்டிருந்தேன். பயங்கரமா தூக்கம் வந்தது.. அப்படியே கண்ணசந்துட்டேன். திடீர்னு டப்னு ஒரு சத்தம். என்னடானு பார்த்தா ஜன்னல் கண்ணாடில ஒரு கை, ரெண்டு தடவை தட்டிட்டு அப்புறம் காணாம போயிடுச்சு. யார்றானு வெளிய வந்து பாத்தா…”
“பாத்தா??”
“வண்டி ஆத்து பாலத்துக்கு மேல போய்கிட்டு இருந்தது”
“இது சாத்தியமேயில்லை”
“நானும் அப்படித் தான் நினைச்சேன். ஆனா திரும்ப ஒரு முகம். முகம் முழுக்க ரத்தம் என் முன்னாடி வந்து நின்னு, தண்ணில குதிச்சது”
“என்னயா சொல்ற??”
“ஆமாங்க, அடுத்த ஸ்டேஷன்லயே இறங்கி மாஸ்டர் கிட்ட சொன்னேன். அவர் சொன்னார் யாரோ ஒரு பணக்கார வீட்டு பையன் ரெண்டு வருஷம் முன்னாடி தவறி விழுந்து செத்து போனான், அதுல இருந்து மாசத்துக்கு ஒரு தடவை இப்படி கம்ப்ளைய்ண்ட் வருதுன்னு சொன்னார்.”
“இப்ப இதெல்லாம் என்கிட்ட எதுக்கு சொன்னீங்க?”
“சும்மா ஒரு அனுபவ பகிர்தல் தான், பிரசன்னா ஒரு சின்ன ஹெல்ப். திருச்சி வரும்போது என்ன கொஞ்சம் எழுப்பி விட்டுட முடியுமா?? நீங்க புக் படிச்சுகிட்டு இருக்கீங்கல்ல, தூங்கபோறீங்கன்னா என்கிட்ட சொல்லிடுங்க சரியா?”
“சரி மைக், அனேகமா தூங்கிடுவேன்னு தான் நினைக்குறேன்”
“பரவாயில்லை, குட் நைட்”
எங்க தூங்க. ஒரு சின்ன சத்தம் பெரிய சத்தம் கேட்டாலே வயிறு என்னமோ பண்ணுது. பாத்ரூமுக்கு தனியா போகவும் பயமா இருக்கு.. என்ன பண்ண??
இந்த ஏ.சி கோச் கூட பெரிய தொல்லை. ஜன்னல் கண்ணாடி வெச்சிருப்பாங்க. வெளில என்ன இருக்குன்னே தெரியாது. எனக்கு உள்ள பயம் + கடுப்பு. என் பேய் கதை மன்னன் நல்லா குறட்டை விட்டு தூங்கிகிட்டு இருந்தான்.
சரி வெளில போய் நிப்பம், கொஞ்சம் நல்லா இருக்கும்னு போய் வெளில நின்னா… ஆத்து பாலம். ஆத்தாடினு உள்ள வந்துட்டேன். எதுக்கு வம்பு. இவனாவது உயிரோட இருக்கான். நான் எல்லாம் அப்படி பாத்தா ஸ்பாட் அவுட். அவ்வளவு பயந்த சுபாவம்..
ஆத்து பாலம் வந்துடுச்சுல்லா.. அடுத்து திருச்சி தான், பயல எழுப்புவம்.
“மைக்! திருச்சி வரப் போகுது எந்திரிங்க”
“ஆவ்! தாங்க்ஸ்” கொட்டாவி விட்டுகிட்டே சொன்னான்.
“அது சரி, என்ன மாதிரியே எல்லாரும் எழுப்பி விடுவாங்களா என்ன? அடுத்த தடவை, மொபைல் போன்ல ரெண்டு மணிக்கு அலாரம் வெச்சுடுய்யா. பிரச்சினை இல்லாம போகும்ல”
“எனக்கு அலாரம் வைக்குறது சுத்தமா பிடிக்காது.. ஆனா ஒவ்வொரு வாட்டியும் கரெக்டா எழுந்துப்பேன்.”
“எப்படி?”
“சும்மா மனசுல வர்ற எதாவது பேய் கதை சொல்லி கூட வர்ற ஆளை பயமுறுத்திடுவேன். அப்புறம் அவன எழுப்ப சொல்லிட்டு தூங்கிடுவேன். அவன் பயத்துல தூங்காம, கடமை உணர்ச்சியோட என்ன எழுப்பி விடுவான். இதுல அவனுக்கு ஒரு டென்ஷன் நமக்கு ஒரு ஆனந்தம். வரட்டா?”
அப்படினு சொல்லி கிளம்பிட்டான்.
நான் ஙேனு முழிச்சிகிட்டிருந்தேன்.

Comments

 1. பொன்ஸ்~~Poorna

  முதல்லியே ஊகிச்சிட்டேன்.. இதுக்குத் தான் நான் பொதுவா ட்ரெய்ன்ல அவ்வளவா பேச்சு கொடுக்கிறதில்லை.. சும்மா எங்க போறீங்க, எந்த பர்த்தோட நிறுத்திக்குவேன்.. 🙂

 2. பிரசன்னா

  அதெப்படி அக்கா, எல்லா கதையயும் நீங்க முன்னாலயே கெஸ் பண்றீங்க.. இருங்க நீங்க கெஸ் பண்ண முடியாத அளவுக்கு ஒரு கதைய நான் சீக்கிரம் தரேன். வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி..

 3. பொன்ஸ்~~Poorna

  அக்கா அக்கான்னாதீங்க.. ஏதோ வயசானா மாதிரி இருக்கு… சும்மா பொன்ஸ்னே சொல்லுங்க 🙂 ஊகிக்க முடியாத கதை என்னவா இருக்கும்னு ஊகிச்சிகிட்டே உட்கார்ந்திருக்கேன் 😉

 4. பிரசன்னா

  அட இப்பமே வா!! நான் அடுத்த வாரம் தான் இணையத்துல அதை போடலாம்னு இருக்கேன்.. பொன்ஸ்க்காக சீக்கிரம் வரலாம்.

 5. பிரசன்னா

  திகில் கதை எழுதுற அளவுக்கு நம்ம கிட்ட சரக்கு இல்லீங்க.. ஏதோ ஒரு வித்தியாசம்னு நான் நினைக்குற ஒரு மேட்டர் இருக்கு. அதான். உங்க அமானுஷ்யா வாசகி நான் வாசித்திருக்கேன். தொடர்கதை மாதிரி எழுதினதால நடுவுல விட்டு போச்சு. இப்ப கண்டிப்பா வந்து வாசிக்குறேன்.

 6. sivagnanamji(#16342789)

  நல்ல பையன்நல்ல கதைமுடிவை ஊகிச்சுட்டேன் னு பொன்ஸ்சொண்ணதை சீரியஸா எடுத்துக்காதீங்க.அவுங்க “ராமாயண”த்தின் முடிவையே ஊகிச்சிட்டதா ஒரு முற சொன்னவங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.