கல்யாணமாம் கல்யாணம்…

நட்சத்திர வாரத்தின் முடிவுல கல்யாணம், நம்ம நிலவு நண்பனுக்கு. நான் ஒண்ணும் புதுசா சொல்றதுக்கில்ல.. நிலவு நண்பன பத்தி..வலைப் பதிவாளர்கள் எல்லாருக்கும் நல்லாவே அவரைத் தெரியும்…ஜூலை ரெண்டாம் தேதி அதாவது இன்னைக்கு அருமையான முறையில் நடந்து முடிந்தது.
சனிக்கிழமை எனக்கு நைட் ஷிப்ட். காலைல வந்து ஞானியார் அனுப்புன மின்னஞ்சல்ல வரவேற்பு தனியா இருக்கானு பார்த்தேன் இல்லை.. சரினு சொல்லி காலைல ஒரு 10 மணிக்கு இருக்குறாப்ல மண்டபத்துக்கு போயிட்டேன். வலை நண்பர்கள சந்திக்குறதுல இருக்குற பிரச்சினை சுவாரஸ்யமானது.. பார்க்குற எல்லாரையும் “இவரா இருக்குமோ?” அப்படின்னே தோணும். அப்படித்தான் நான் மண்டபத்துல துபாய் ராஜா சாரைத் தேடினேன். சார் கண்லயே படலை.
சரி!! எனக்கு ஏற்கனவே அவங்க கல்யாண முறை பழக்கம் அப்படிங்குறதால உள்ள போய் உக்காந்து கிட்டேன். உள்ள போனதுக்கப்புறம் தான் தெரிஞ்சது, நிலவு நண்பனோட தம்பி நெஹ்மத்துல்லா, நம்ம செட்னு.. அவரோட பிரண்ட்ஸ் பல பேரை எனக்கு தெரிஞ்சு இருந்தது.. அதனால மிங்கிள் ஆகுறதுல பிரச்சினை இல்லை.
கல்யாணத்துல சம்பிரதாயங்கள் துவங்குவதற்கு முன்னால, மணமக்களை வாழ்த்தி பேச வந்தாங்க. முதல்ல ஒருத்தர் நல்ல கணீர் குரல்ல பேச ஆரமிச்சார். அவர் சொல்ல சொல்ல தான் நம்ம நிலவு நண்பன இன்னும் நல்லா தெரிஞ்சுக்க முடிஞ்சது. எல்லாரும் அப்படி பாராட்டுறாங்க. சதக் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முதற்கொண்டு வந்து வாழ்த்தினாங்க.. எத்தன பேருக்கு இந்த மாதிரி நடக்கும்? ஞானியாரே! ராசிக்காரர் தான் நீங்க..
அப்புறம் சம்பிரதாயம் எல்லாம் முடிஞ்ச பின்னால வரிசைல நின்னு போய் நான் வாழ்த்தினேன். ஏற்கனவே தொலைபேசில பேசி இருந்ததால பெரிய அறிமுகம் ஒண்ணும் தேவைப் படலை. கல்யாணத்துல உபசரிப்பு ரொம்ப நல்லா இருந்தது.. சைவத்துக்கும் அசைவத்துக்கும் தனி தனி பந்திகள் இருந்தது. நான் எல்லாம் ரெண்டு பிரியாணியும் நல்லா இருக்குதானு பார்த்துட்டேன். சைவ சாப்பாடுல போட்ட கேசரி..டாப் கிளாஸ்..
ஐஸ் வரைக்கும் சாப்பிட்டு முடித்த பிறகு மறுபடி மேடைக்கு போய் பார்த்தேன்..
“என்ன தல!! யாரையும் காணோம், நான் மட்டும் தான் வந்திருக்கேனா?”
“அப்படி எல்லாம் இல்லையே! சிங் ஜெயக்குமார், ப்ரியன், நிலாரசிகன், துபாய் ராஜா, எல்லாரும் வந்திருந்தாங்களே. நாகை சிவா கால் பண்ணி இருந்தார்.கொஞ்சம் சீக்கிரம் வந்து இருந்தீங்கன்னா அறிமுகமாகி இருக்கலாம்.”
அய்யோ மூணு பேரையும் பார்க்காம மிஸ் பண்ணிட்டமேனு இருந்தது.. அண்ணிகிட்ட அறிமுகம் என்னை அறிமுகம் பண்ணி வெச்சார் ஞானியார்.. அப்புறம் விடை குடுத்துட்டு வந்துட்டேன். இன்னும் மூணு மாசத்துக்கு இங்க தான இருப்பார் பொறுமையா நம்ம விருந்து குடுத்துக்கலாம்.
இதை துபாய் ராஜா படிப்பார்னு நினைக்குறேன். அவருக்காக..
“என்னங்க போன் நம்பர் எதுக்கு குடுத்தேன்.. கால் பண்ணுங்க தலைவா.. ஊருக்கு போரதுக்கு முன்னாடி பார்க்க வேண்டாமா??”
இது தாங்க நான் இன்னைக்கு உருப்படியா பண்ண காரியம்..
ஞானியும் அண்ணியும் பல வருஷங்கள் இன்னைக்கு இருந்த மாதிரியே சந்தோஷமா இருக்கணும்.
பி.கு. இன்னைக்கு கல்யாணத்துக்கு வந்த எல்லாரும் சொல்லிட்டாங்க. “ஜோடிப் பொருத்தம் பிரமாதம்”னு. சுத்தி போட்டுகுங்க!!!

Comments

  1. நிலவு நண்பன்

    நன்றி பிரசன்னா..திருமண அவசரத்தில் யாரையும் சரிவர கவனிக்கவே முடியவில்லை..மன்னித்துக்கொள்ளுங்கள்..இந்த உதவியை மறக்கவே முடியாது..திருமண பரபரப்புகள் முடிந்தவுடன் தொலைபேசியில் அழைக்கின்றேன்

  2. பிரசன்னா

    நன்றி மஞ்சூர் ராசா, அடுத்து உடனே நம்ம ஆள் ஒருத்தருக்கு கல்யாணம் வர்ற மாதிரி இருக்கு. அறிவிப்பு வந்த உடனே சொல்றேன். அப்ப எல்லாரையும் பாத்துகிட்டா போச்சு..

  3. பிரசன்னா

    என்ன ரசிகவ் சார், நன்றி எல்லாம் சொல்லிகிட்டு. உங்க அழைப்புக்காக காத்துகிட்டு இருக்கேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.