பெண்ணாசை பொல்லாதது : பாகம் 2

போன தடவை நான் ஆப்பிள் வித்த கதையை சொல்லி இருந்தேன். படிக்காதவங்க இந்த சுட்டிய பாருங்க…
இந்த தடவை அவசரப்பட்டு நாங்க மாட்டிகிட்ட கதை சொல்ல போறேன்.
எங்களுக்கு லட்சுமணானு ஒரு ஃப்ரெண்ட் உண்டு. அவரோட அக்காவுக்கு கல்யாணம்னு நாங்க நண்பர்கள் எல்லாரும் கிளம்பி சங்கரன்கோவில் போனோம். எங்க செட்ல குமார்னு ஒரு பையன் உண்டு. நல்ல உயரம், கலர்னு அவந்தான் எங்க செட்ல ஹீரோ. ஆனா அவன் டேஸ்ட் சரி கிடையாது. அப்போ நாங்க ஊர்ல மெஸ் வெச்சிருந்தோம். அதனால எங்க அண்ணன தவிர நான், பாலா, ஐயப்பா, குமார் எல்லாரும் கிளம்பி போனோம். கல்யாணம் நல்லபடியா நடந்தது..
அங்க தான் ரேவதினு ஒரு பொண்ண பார்த்து பேசி இருக்கான். அவன் எப்பவுமே அப்படித்தான். எந்த பொண்ணயும் விட மாட்டான். அதனால பரவாயில்லனு நான் சும்ம இருந்திட்டேன். ஆனா மத்த நண்பர்கள் அப்படி விடல. இந்த குமார் பய என்ன பண்ணியிருக்கான், அவன் நம்பர மட்டும் குடுத்துட்டு வந்திருக்கான். நம்ம பசங்க சும்ம இருப்பாங்களா??? ஒரு ஞாயித்துகிழமை எங்க மெஸ்க்கு வந்து அங்க இருந்த் அந்த பொண்ணுக்கு கால் பண்ணி
“ஹலோ! யாரு ரேவதியா?? என்னம்மா இப்படி பண்ணிட்ட? நீ பாட்டுக்கு குமாருக்கு ஃபோன் பண்ணிட்ட. அதனால அவனுக்கு ரொம்ப ப்ராப்ளம். ஸோ நீ என்ன பண்ணு இனிமே இந்த நம்பருக்கு கால் பண்ணு. பிரசன்னானு ஒருத்தன் இருப்பான். அவன்கிட்ட மெட்டர சொன்னா அவன் குமார் கிட்ட சொல்லிடுவான்” அப்படின்னு சொல்லிட்டாங்க
இதுல என்ன மேட்டர்னா, இப்பொ குமார்க்கு கால் போகாது. அப்படி அவன்கிட்ட இந்த பொண்ணு என்ன சொன்னாலும் அது எங்க மூலமாதான் அவனுக்கு போகணும். இதனால எங்களுக்கு தெரியாம அவன் எதுவும் பண்ண முடியாது. இந்த மாதிரி நல்ல எண்ணம் படைத்த நண்பர்கள் யாருக்காவது கிடைப்பாங்களா???
நான் இத பெருசா கண்டுக்கல, ஏன்னா அந்த பொண்ணு அவ்வளவு விசேஷமா இருக்க மாட்டா. அடுத்த நாள் நான் காலேஜ் லீவ் போட வேண்டிய சூழ் நிலை. மத்தியானம் ஒரு 3 மணி இருக்கும். சாப்பாடு எல்லாம் முடிஞ்ச பிறகு, ரொம்ப அசதியா இருக்குன்னு நான் கொஞ்சம் படுத்துகிட்டேன். அப்போ சரியா வந்தது ஒரு கால். பேசினது ஒரு பொண்ணு; அய்யோ அய்யோ குரல்னா அதுதான் குரல். சும்மா சுஜாதா, ஜானகி எல்லாம் பிச்சை வாங்கணும். அப்படி ஒரு அருமையான குரல்.
“ஹலோ பிரசன்னாவா?? என் பேரு ஹெல்மினா. நான் ரேவதியோட ஃபிரண்ட். கொஞ்ச நேரம் உங்க கூட பேச முடியுமா??”
என்னால சத்தியமா நம்ப முடியல. நாமளா போய் பேசினா கூட ஒரு பொண்ணும் நம்ம கிட்ட பேசினதில்லை.இப்போ இப்படி ஒரு குரல் உள்ள பொண்ணா?? நம்ம கிட்ட பேசுதா??
“பேசலாமே!!” இது நான்.
அந்த கொஞ்ச நேரம் சாயந்திரம் 5.30 வரைக்கும் போச்சு. அப்பவே எங்க அப்பா ஒரு மாதிரி பார்த்தார். அவள பத்தி எல்லாம் சொல்லிட்டா. திருப்பி ராத்திரி ஏழு மணிக்கு திரும்ப கால் பண்ணி என்ன மறந்துட்டீங்களானு கேக்குறா. இப்படி ஒரு மாதிரி போச்சு அந்த பழக்கம்.
இந்த மேட்ட்ர் நம்ம பசங்களுக்கு தெரிஞ்சு போச்சு. எல்லாம் பயங்கர ரவுசு. “ஏண்டா, குமார் பிரச்சினை பண்றான்னு உன் நம்பர் குடுத்தா, நீ பிக் அப் பண்றியா??”னு. சரி எதுக்கு ஃபோன்லயே பேசிகிட்டுனு நான் நேர்ல மீட் பண்ணலாமான்னு கேட்டேன்.அவளும் சரி அப்படின்னு சொல்லி ” நான் பச்ச கலர் சுடி போட்டு, அரசன் ஐஸ்க்ரீம் பார்லர் பக்கத்துல நிப்பேன். நான் கைல வெச்சிருக்குற பைல “5”னு எழுதி இருக்கும்னு சொன்னா.
நானும் அம்மாகிட்ட கெஞ்சி கூத்தாடி 150 ரூவா வாங்கிகிட்டு, மறு நாள் அங்க போனா, அங்க நின்னா பாருங்க அந்த பீப்பா… வாழ்கையே வெறுத்துடுச்சுங்க. அவ அப்படியே சத்தியராஜ் மாதிரி கை எல்லாம் ஒரே முடி. எப்படி பக்கத்துல உக்காந்து பேச முடியும். எனக்கே இவ்வளவு ஷாக்னா அவள பத்தி கேக்கவே தேவை இல்ல.சுத்தமா அப்செட்.சரி வானு அவள கூப்டு போய் ஒரு கரும்புச்சாறு வாங்கி குடுத்து அனுப்பிட்டேன்.
கிளம்பும்போது ” நாளைக்கு காலைல 9.30 மணிக்கு எங்க வீட்டுக்கு வரீங்களா??” அப்டின்னு கேட்டா.
“முடிஞ்சா பார்க்கலாம்”னு சொல்லிட்டேன்.
பசங்ககிட்ட இந்த மேட்டர் பத்தி பேசி ஒரு மணி நேரம் அழுதேன். பாலா எந்திரிச்சான், ” நீ சொல்றதுல எனக்கு சுத்தமா நம்பிக்கை கிடையாது. நீ மட்டும் என்சாய் பண்ணலாம்னு நினைக்குற! நாளைக்கு காலைல நம்ம போறோம்!”
அப்படின்னு சொல்லிட்டான். நான் தான் விடாக்கண்டனுக்கு கொடாகண்டன் ஆச்சே. அடுத்த நாள் காலைல நான் கிளம்பி எங்க சித்தி வீட்டுக்கு போய்ட்டேன். பசங்க கிளம்பி நேரா எங்க சித்தி வீட்டுக்கே வந்துட்டாங்க. அப்போ மணி பத்து. குருப்ல ஒருத்தம் புதுசா இருந்தான்.
“சார் யாரு?? பார்த்ததே இல்ல, உன் கூட்டாளியா?”
“இவன் பேர் பெருமாள். ஊரு மூளிகுளம், கொத்து வேலைக்கு போறாப்ல.புள்ளய பார்க்க போறோம்னு கூப்டு வந்தேன்.”
அடப்பாவி!! சரி போகலாம். அவங்க ஏரியாக்கு போகும்போது மணி சரியா பதினொண்ணு. அங்க ஒரு பூத்ல இருந்து கால் பண்ணி நாங்க வந்தத சொன்னோம். நான் வந்து கூப்டு போறேன்னு சொல்லி வெச்சிட்டா. பாலா ஸ்டைலா ஒரு மரத்துலா சாய்ஞ்சுகிட்டு வெயிட்டிங். அந்த பொண்ணு தூரத்துல வந்த போதே நான் பார்த்துட்டேன்.
“வாடா! போகலாம்”
“இரு! ஹெல்மினா வரட்டும்”
“இவதாண்டா ஹெல்மினா!”
“என்னது??”
“இதுக்குதான் நான் நேத்திக்கே தல தலயா அடிச்சுகிட்டேன். நீதான் கேக்கல.”
“மன்னிச்சிடுடா”
அதுக்குள்ள அந்த போண்ணு, “உங்களுக்காக எவ்ளொ நேரம் காத்துகிட்டு இருக்கிறது, வாங்க என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் உங்கள பார்க்க வெயிட் பண்ணிகிட்டு இருக்காங்க”
இவதான் இப்படின்னு பார்த்தா, அவ ஃப்ரண்ட்ஸ், அப்பப்பா, என்ன அழகு! காதலிக்க நேரமில்லை படத்துல நாகேஷ் சொல்லுவார்ல ‘ஒரு கண்ணுள்ள பொண்ணு’ அத நான் அன்னைக்கு தான் பார்த்தேன். ஒண்ற கண்ணெல்லாம் கிடையாது. இந்த பக்கம் அரை, அந்த பக்கம் அரை. மொத்தம் ஒரு கண்ணு.
அவ என்ன பார்த்துக்கிட்டே பாலா கிட்ட பேசுறா செம டாலண்ட்.
மெயின் மேட்டரே இப்பொ தான் ஆரம்பிக்குது.
அவங்க அப்பா சர்ச்க்கு போற நேரமா எங்கள வர சொல்லி இருக்கா. நாங்க வழக்கம் போல ரெண்டு மணி நேரம் லேட். அதுல அவங்க டாடி வந்த உடனே, இரக்கமே இல்லாம “உங்கள பார்க்கத்தான் வந்திருகாங்க டாடி” அப்படின்னு சொல்லிட்டா.
அப்புறம் என்ன எம்.எல்.எம். அப்படி இப்படினு சொல்லி தப்பிச்சு வர்றதுகுள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.
அதனால தான் சொல்றேன். பெண்ணாசை பொல்லாதது.

3 Comments

 1. sasero August 4, 2013 at 5:23 am

  anna nalla ezhuthireenga. but pinnottamae ellai yaen?

  Reply
  1. Bragadeesh Prasanna August 12, 2013 at 6:54 am

   Athellam namma kailaya irukku?

   Reply
 2. Tinytoes August 29, 2013 at 12:04 pm

  hahaha sema… ROFL… 😛 😛 😀

  Reply

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.