காதல் – பாகம் 2.

அந்த ரங்கசாமிய நான் அடுத்த நாள் அதாவது நேத்திக்கு கூழ் கடைல வெச்சு பார்தேன். பய யான செவப்பு. சரி பய என்னதான் சொல்றான் பார்போமேன்னு கூழ் கடைல கம்னு நின்னுகிட்ருந்தேன்.
கூழ் கடைல வந்து ரொம்ப பவ்யமா விசாரிச்சு, பைய வாங்கிட்டு கிளம்பினான். செமயா பச்ச கலர்ல கருப்பு டிசைன் போட்ட சட்ட, மோசமான நிலமைல ஒரு ஜீன், பயபுள்ள தலய வேற கலர் அடிச்சு விட்ருந்தான். நான் எதிர்பார்த்ததுக்கு கொஞ்சம் கூட மாறுபாடில்லை.
கூட சரியா இவனுக்கு ஒரு நண்பன் இருந்தான். பெருசா ஒரு வித்தியாசமும் இல்லை. அவன் பச்ச சட்ட, இவன் மஞ்சள் அவ்ளோதான். முதல்ல ஞாபகமா அந்த லெட்டர் இருக்கான்னு பார்த்தான். அப்புறம் அந்த லெட்டர எடுத்து அவன் நண்பன் கிட்ட குடுத்து படிக்க சொன்னான். அப்போவே அவன ரெண்டு எளக்கு விடணும்னு தோணிச்சு, ஆனா கிராமத்து பையன் இல்லயா, கை எல்லாம் நல்ல கிண்ணுனு இருந்தது. அதனால வன்முறை எண்ணத்த கை விட்டேன்.
சரி எங்கதான் போறாங்கன்னு பார்க்கலாம்னு நாங்க சைக்கிள் ஸ்டார்ட் பண்ணோம். (கூட்டாளிகளோட தான் போனேன்). அவன் நேரா ஒரு பி.சி.ஓகு போனான். அங்கதான் அந்த போண்ணு வேலை பார்க்குது போல இருக்கு. இவன பார்த்ததும் வெளில வந்தது, வாயில பெரிய ரணம் மாதிரி இருந்தது. டாக்டர் கிட்ட போகல போல இருக்கு. அப்பவும் அந்த பையன் அதப் பத்தி ஒரு வார்த்தை கூடக் கேக்கல, அவன் பாட்டுக்கு தன் கூட வந்த நண்பன காட்டி எதோ சொல்லிகிட்ருந்தான்.
கொஞ்சம் கிட்டப் போய், “இங்க செல்வி யாருங்க??”னு கேட்டேன். அந்த பையன் அவ்ளொதான் அந்த பொண்ண பார்வைலயே எரிச்சுட்டான். அந்த பொண்ணு பயந்து போய்
” நான் தான் அண்ணா! ஆனா நீங்க யாருன்னு தெரியலியே”
” இவந்தான் ரங்கசாமியா??”
பய உள்ள எண்ட்ரி
” ஹலோ! கொஞ்சம் மரியாதையா பேசுங்க”
” சரிங்க மரியாதைக்குரிய நண்பா! நீயெல்லாம் ஆம்பிளயாடா, பொண்ணுகிட்ட காசு வாங்கிட்டு டூர் போயிருக்க??”
” அதெப்படி உனக்கு தெரியும்?? அப்படினாலும் அது என் விஷயம்! அதப்பத்தி உனக்கென்ன?
” சரிடா, இந்த பொண்ணு பல் ஏன் உடைஞ்சிருக்கு??”
“இந்த மூதேவிக்கு என்ன ஆனாலும் நான் தான் பொறுப்பா?”
“ஆமாடா! அப்படி சொல்லிதான லவ் பண்ண?”
இப்படி பேசிக்கிட்டிருக்கும் போதே அந்த பொண்ணு, “எதுக்கு இப்படி தேவை இல்லாம வம்பு பண்றீங்க, போங்க தூர” அப்படினு கத்த ஆரம்பிச்சிடுச்சு.
அதுக்கு அந்த பையன் “ஏண்டி!! ஆளையும் வெச்சு பேசிட்டு, இப்பொ என்ன நல்லவ மாதிரி பேசுற?? இனி நீயும் வேணாம் உன் சங்காப்த்தமும் வேணாம். நீ நல்லாயிரு(!)” அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டான்.
அவ்ளோதான், அந்த பொண்ணு ‘ஓ’னு அழ ஆரம்பிச்சிடுச்சு, “என்ன பிரச்சினைனாலும் நான் பேசி இருப்பேன்ல, உங்கள யாரு மூக்க நுழைக்க சொன்னா?? இப்பொ பாருங்க என்ன ஆச்சின்னு. அவரு என்கிட்ட திரும்பி வரமாட்டார்!”
” இல்லம்மா! இன்னைக்கு அவன் நீ குடுத்த 5000 க்கு என்ன பதில் சொல்லனு வந்து நின்னி அதுக்காக சண்டை போட்டு போறான்.காசு தேவைப்படும் போது கண்டிப்பா வருவான். அப்போவாவது நீ அவன பத்தியும், என்ன பத்தியும் புரிஞ்சுக்கோ”
“அதெல்லாம் எனக்கு தெரியும், நீங்க போகலாம்!”
திரும்பி பார்க்க கூட முடியாம வந்துட்டோம். அந்த பையன் தன்ன எப்படி பயன்படுதிக்கிறான்னு தெரிஞ்சும், எமோஷனல் பிளாக்மெயில் பண்றான்னு தெரிஞ்சும் இந்த பொண்ணு இப்படி ஏமாறுதே!!
என்க்கு ஏற்பட்ட தோல்வி தான் இந்த பதிவை இன்னைக்கு சொல்ல சொன்னது. அந்த பையன் குடுத்து வெச்சவன். இந்த பொண்ணு பாவம் பண்ணவ..
புரிஞ்சுகிட்டு திருந்தினா பரவாயில்ல. விவேக் ஒரு படத்துல சொல்லுவார் “இந்த பொண்ணுங்களே இப்படித்தான். ஊர்ல யார் மொள்ளமாரி, முடிச்சவுக்கி, இவங்களயா பாத்து லவ் பண்ணுவ்வளுக! நம்மள த்ராட்ல விட்றுவாளுக”னு. எவ்வளவு நிஜம். இப்படி இத பத்தி யோசிக்கும் போது தான் பிரேமலதா அவங்க ஒரு மேட்டர் குடுத்திருந்தாங்க!! இதோ சுட்டி.
என்ன ஒரு கோ இன்ஸிடென்ஸ்.அடுத்ததும் பாகம் 2 தான். ஆனா வேற பதிவு. பெண்ணாசை பொல்லாதது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.