காதல்!!!!

விஜய் நடிச்ச ஷாஜஹான் படம் பாத்திருகீங்களா? அதுல ஒரு காரெக்டர் “காதல், ஹும் காதல்” அப்படின்னு தலைல அடிச்சிட்டு போவார். அதே மாதிரி ஒரு மேட்டர் இன்னைக்கு எனக்கு நடந்தது.
பாம்பே தியேட்டர்ல திருட்டு பயலே படம் பார்த்திட்டு திரும்பி வந்துகிட்டு இருந்தோம். எனக்கும் சரி என் நண்பர்களுக்கும் சரி கூழ் குடிக்க ரொம்ப பிடிக்கும். அப்பொ எங்களுக்கு முன்னடி கூழ் குடிச்சிட்டு போன பய அவன் பைய வெச்சிட்டு போய்ட்டான்.
கூழ் கடைல உள்ள பையன், “அண்ணே! செவப்பு சட்ட போட்டு போறாரு. சைக்கிள்ல போகும் போது குடுத்திருங்க! இன்னும் ரோடு முக்குக்கு கூட போயிருக்க மாட்டார்”ன்னான். பாலா கூட சொன்னான் நமக்கு ஏண்டா வம்புன்னு நான் கொழுப்பெடுத்து போய் வாங்கினேன்.
துரத்தி போய் பிடிச்சிடலாம்னு நினைக்கும் போது, வந்த ஒரு பஸ்ஸ கை காமிச்சு நிப்பாட்டி ஏறி போய்ட்டார் நம்ம பார்ட்டி. சரி திரும்ப வெயில்ல கொண்டு போய் திரும்ப கடைல குடுக்க சோம்பேறித்தனமா இருந்தது. வீட்டுக்கு கொண்டு வந்துட்டேன். சரி பைய நோண்டுனா எதாவது மேட்டர் கிடைக்குமான்னு பார்த்தேன்.
ரெண்டு நோட் புக், ஒரு நாத்தம் பிடிச்ச டிபன் பாக்ஸ், இத தவிர வேற ஒண்ணும் இல்ல. பையன் பேரு ரங்கசாமி, ஊர் தருவை இது மட்டும்தான் தெரிஞ்சுக்க முடிஞ்சது. காலேஜ் மேல என்ன கோவமோ? காலேஜ் பேரும் இல்ல. சரி விடுடா நாளைக்கு கடைல குடுக்கலாம்னு நினைச்சப்போ தான், அந்த லெட்டர பார்த்தேன்.
அந்த லெட்டர நான் இப்பொ உங்கள படிக்க சொல்றேன், படிச்சு பாருங்க.
“அன்பு கணவரே!!
நீங்கள் இப்போதெல்லாம் என்னிடம் பேச மறுப்பது எனக்கு புதிதாக மட்டுமல்ல, வேதனையாகவும் இருக்கிறது. நான் உங்கள் மனம் பாதிக்கும் வண்ணம் நடந்திருந்தால் என்னை மன்னிக்கவும். நான் உங்களை போல் படிக்கவில்லயே!
நான் எப்படி இருப்பேன் என்று உங்களுக்கு முன்னமே தெரியும். அப்படி இருக்கும் போது, என்னிடம் நீங்கள் முதலில் லெட்டர் குடுத்த போது நான் மறுத்தேன். அப்பொழுதும் தற்கொலை செய்வதாக சொல்லி என்னை மிரட்டினீர்கள். பின் உங்கள் குடும்பம் முதலியவற்றை என்னிடம் சொல்லி என் மொத்த அனுதாபத்தையும் பெற்றீர்கள். நான் உங்களிடம் நன்றாகத் தானே நடந்து கொண்டிருக்கிறேன்.”
இப்பொ லெட்டர் லோக்கல் தமிழுக்கு மாறுது.
” நேத்திக்கு தியேட்ட்ர்ல நடந்தது எனக்கும் வருத்தம் தான். கரண்ட் கட்டான நேரத்துல நீங்க என்ன உதட்டுல கிஸ் பண்ண்வீங்கன்னு நான் நினைக்கல. என் பல் வெளில துருத்திகிட்டு இருந்தா அதுக்கு நான் என்ன பண்ண முடியும். அதுக்கு நீங்க எப்படி எல்லம் பேசினீங்க? அதுவும் நான் வேலை பார்க்குற எடத்துல வெச்சு. எல்லார மாதிரி தான நானும். எனக்கும் நீங்க என்ன அதிகமா லவ் பண்ணனும்னு ஆசை இருக்காதா??? இதே மூஞ்சி, நீங்க டூர் போறதுக்கு 5000 ரூவா குடுத்தப்போ பிடிச்சிருந்தது???
நேத்திக்கு தான் நான் ரொம்ப அழுத நாள். ஏன் தெரியுமா??? உங்கள காயப்படுத்தின என் முன் பல் ரெண்டையும் சுத்தியால அடிச்சுகிட்டேன். பல் உடைஞ்சிருச்சு. அதான் நான் இன்னைக்கு நேர்ல வராம, டயானா கிட்ட குடுத்து விட்ருக்கேன். என்ன கை விட்றாதீங்க, ப்ளீஸ்.
அப்புறம் நான் உங்களுக்கு ரூவா குடுக்குறதுக்காக என் செயின அடகு வெச்சேன். அது வீட்ல கொஞ்சம் பிரச்சினை ஆயிடுச்சி. கொஞ்சம் காசு அரேஞ் பண்ண முடியுமா??
இப்படிக்கு
உங்கள் மனைவி,
செல்வி”
என்னத்த சொல்ல, அப்பா அம்மா அண்ணன் தங்கை இவங்க பொழியுற பாசத்த விடவா எவனோ ஒருத்தன் தர்ற அன்பு பெருசா இருக்கு?? இந்த போண்ணுங்கள புரிஞ்சுக்கவே முடியல. நான் பார்த்த வரைக்கும் வேலைக்கு போற பொண்ணுங்க தான் இப்படி அதிகமா பாதிக்க படுறாங்க. நம்ம உழைப்ப நம்ம வீட்ல உரிஞ்சுறாங்க அப்படிங்குற நினைப்பு தான் அவங்கள இந்த மாதிரி பசங்க கிட்ட மாட்டி விடுது.
நாளைக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. கூழ் கடைல காலைல இருந்து உக்காந்து பைய தேடி யார் வர்றாங்கன்னு பார்க்கணும். அந்த அஜித் குமார் எப்படி இருப்பார்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.