பெண்ணாசை பொல்லாதது

சமீபத்துல எங்க அண்ணனோட பதிவுல இந்த மேட்டர் போடபட்டிருந்து. அதாவது சட்டுனு எங்க ஊர்ல பெரிய மனுஷன் ஆரவங்கள பத்தி. அவர் சொன்னது ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்ன்ற் கணக்கு தான். சொல்ல போனா நிறய சிரிக்க வைப்பானுங்க இந்த குரூப்ஸ்.
“முட்டா பயல எல்லாம் தாண்டவக்கோனே; காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே” அப்படின்னு ஒரு பாட்டு உண்டு. அதெ மாதிரி தான். இந்த தடவை எங்க தொகுதியில நிக்க போற ஒருத்தன எனக்கு பத்து பதினஞ்சு வருஷதுக்கு முன்னால இருந்து தெரியும். பக்கா ரவுடி. அவனுக்கு ரேஷன் அரிசி எவ்ளோ ரூபாய்க்கு விக்குதுன்னு கூட தெரியாது. அவ்ளோ பணக்காரன். இப்பொ ஒரு கல்யாண மன்டபத்த வாங்கி பினாமி பேர்ல நடத்திகிட்டு இருக்கான்.
இவன் ஜெயிச்சு நல்லது பண்றதெல்லாம் நடக்காத காரியம். இதுல வருத்தப்பட வேண்டிய விஷயம் என்ன அப்படின்னா. இந்த மாதிரி ரவுடி பசங்களொட பொண்ணோ இல்ல அவங்க சொந்தக்கார போண்ணோ ரொம்ப அழகா இருப்பளுக. பார்த்தா நல்லா கம்பெனி குடுப்பாளுக. ஆனா பின்னாடி போனோம் அவ்ளோதான். ஒரு பெரிய குரூப்பே அடி பின்னி எடுக்கும்.
என் அருமை நண்பர் ஐயப்பன் இந்தா மாதிரியான பாரம்பரியத்துல வந்த ஒரு பொண்ண சைட் அடிச்சாரு. அந்த பொண்ணு திரும்பி கூட பார்கல அது வேற விஷயம். அப்போ அவர் சொல்லுவார்.
“பிரசன்னா! உன் சைக்கிள் முன்னாடி ரன் அப்படின்னு எழுது! அப்பொ தான் (குரல் மெதுவாகிறது) நான் சுந்தரபான்டியன் பொண்ண இழுத்துகிட்டு ஓட முடியும்”
“ஏண்ணே அவன் பேர சொல்லவே இப்படி பயப்படுரீங்களே, இதெல்லாம் நமக்கு தேவையா?அவன் ஆயிரம் டாடா சுமோல துரத்துவான் அப்புறம்.” இது நான்
“துரத்தினா துரத்தட்டும்! நான் கில்லிடா”
“ஆமா அவன் தாண்டு, சும்மா சுத்தல்ல விட்டு அடிப்பான் தெரியும்ல?”
” நீ சொல்றதும் சரிதான், அடுத்த ஜென்மத்திலாவது அவன விட பெரிய ரவுடியாகி அவன் பொண்ண தூக்குவேன்”
இது போல நாங்க ஆரம்பத்திலயே எல்லா சாதக பாதகங்களயும் அலசிடுவோம்.
ஆனா எங்கள் பெண்ணாசை என்ன பாடெல்லம் படுத்திச்சி தெரியுமா?
திருனெல்வேலி மாதிரி ஒரு ஊர்ல வாழ குடுத்து வெசிருக்கணும். ஆனா பொண்ணுங்க மேல ஆசை படாம இருக்க கத்துக்கனும். ஒரு நாள் நானும் இந்த ஐயப்பா அண்ணனும் செருப்பு வாங போனோம். அங்க ரென்டு முஸ்லிம் பொண்ணுங்க நின்னு செருப்பு பார்த்துகிட்ருந்தது. எதுக்குட வம்புனு நான் திரும்புரதுகுள்ள நம்ம அண்ணன் சிக்னல் குடுத்துட்டார். அந்த பொண்ணும் ம்ம்ம்…
அப்புறம் என்ன அந்த பொண்ணு பின்னாடியெ போய் வீட்ட பார்தாச்சு. அடுத்த நாள் சாயங்காலம் நல்ல டீக்கா டிரஸ் பண்ணிகிட்டு அண்ணன் நம்ம வீட்டு வாசல்ல நிக்குறாப்புல.
“பிரஸ்! வா போவோம்”
“எங்க??”
“உங்க அண்ணிய பார்க்க” இத சொல்லும்போது நீங எங்க அண்ணன் முகத்த பார்கணுமே. கோடி சூரிய பிரகாசம் தெரின்சது
சரின்னு சொல்லி கிளம்பி போனா. அந்த பொண்ணு முந்தின நாள் குடுத்ததுக்கு முற்றிலும் ஆப்போசிட் ரியாக்ஷன் குடுதுட்டா. அந்த தெருவுல வர்ற வழிய ஆட்டோ காரங்க அடைசிட்டாங்க. இன்னொரு வாசல் தான் இருக்கு. யாரும் என்னை பார்கல, கைலி தான் கட்டி இருந்தேன். கத முடிஞ்சதுனு நினைக்கும்போது தான் எனக்கு பக்கத்துல தெய்வத்தின் குரல் கேட்டது.
“ஆப்பிள் கிலோ பத்து ரூவா” ஆப்பிள் காரன் வண்டிய தள்ளிகிட்டு வந்தான். தப்பிக்க ஒரே வழி அதுதான். நானும் கூட சேர்ந்து “ஆப்பிள் கிலோ பத்து ரூவா” “ஆப்பிள் கிலோ பத்து ரூவா”னு கூவிகினே தெருவ தாண்டிட்டேன்.
ஓ! நீங்க என்ன கேக்குரீஙன்னு புரியுது. ஐயப்பா அண்ணன் தான. அவர பத்தி எனக்கு என்ன கவலை!! உயிர் பெருசா? நட்பு பெருசா? என்ற அப்போதய கேள்விக்கு நான் உயிரத் தான் சூஸ் பண்ணேன்

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.