ஒரு பிரபலமான மனோதத்துவ நிபுணர் ஒரு பேட்டிக்காக அந்த தொலைகாட்சி அரங்கத்துக்கு வந்திருந்தார்.
அப்போ அவர பாத்து பேட்டி எடுத்த அந்த தொகுப்பாளர் கேட்டாங்க “சார்!எப்படி சார் நல்ல மனநிலையில இருக்குற மாதிரி நடிக்குற மனநோயாளிய கண்டுபிடிக்கிறீங்க?”
“எதுவுமே சுலபம் இல்ல மேடம், நான் அவங்ககிட்ட எல்லாரும் பதில் சொல்லக் கூடிய ஒரு சுலபமான கேள்விய கேப்பேன், பதில் சொல்ல கஷ்டப்பட்டா நம்மளே புரிஞ்சுக்கலாம்”
“ஏதாவது உதாரணம் சொல்ல முடியுமா?”
“தாமஸ் குக், மூணு தடவை உலகத்தை சுத்தி வந்தார், அப்படி வரும்போது தன் ஒரு தடவை இறந்து போனார், அது எத்தனாவது தடவை? உங்களுக்கு தெரியுமா?”
“வேற ஏதாவது சப்ஜெக்ட்ல கேளுங்களேன், நான் வரலாறுல கொஞ்சம் வீக்”
About The Author
prasanna