Bragadeesh Prasanna
  • About Prasanna
  • Bucket List
  • Contact Me
  • Podcasts

பீர் பாட்டிலில் பீறிடும் புரட்சி!-என் கருத்து..

08 May 200608 May 2006 / By prasanna

சமீபத்தில வெளி வந்த ரங் தே பசந்தி என்கிற படத்தை பற்றிய விமர்சன பதிவு ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவரது பார்வைகள் விசாலமாகத் தான் இருக்கிறது. படத்தை இருமுறை ரசித்து பார்த்தவன் என்கின்ற நானும் எனது கருத்துக்கள் சிலவற்றை சொல்ல ஆசைப்படுகிறேன்.
கதைச்சுருக்கம்..

லண்டனில் இருக்கும் ஓர் ஆங்கிலேயப் பெண் இந்தியாவில் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய புரட்சிகர வீரர்களான சந்திரசேகர ஆசாத், பகத்சிங், ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்பகுல்லா கான் முதலானவர்களின் வரலாற்றில் ஆர்வம் கொள்கிறாள். அவர்களைப் பற்றி அவள் எடுக்க விரும்பும் ஆவணப்படம் மிகுந்த செலவு பிடிக்கும் என்பதால் அவள் வேலை பார்க்கும் என்.ஆர்.ஐ. இந்தியர்களை இயக்குநர்களாகக் கொண்ட நிறுவனம் மறுத்து விடுகிறது. இதனால் தன் சொந்த முயற்சியில் படமெடுப்பதற்கு இந்தியா கிளம்புகிறாள்.

புதுதில்லியில் இறங்குபவளை வரவேற்கும் ஒரு இந்தியத் தோழியின் உதவியோடு தன் ஆவணப்படத்தில் நடிக்க வைப்பதற்கு பல கல்லூரி மாணவர்களைச் சந்திக்கிறாள். ஆசாத், பகத்சிங் உரையாடல்களைப் பேசத் திணறும் அந்த நவநாகரீக இளைஞர்களைக் கண்டு சலிப்புக் கொள்கிறாள். சலித்தவளை ஜாலியாக மாற்றுவதற்கு அந்த இந்தியத் தோழி தன்னுடைய நண்பர் வட்டத்தை அறிமுகம் செய்கிறாள்.

ஆமிர்கானின் அந்த நண்பர் வட்டம் வண்ணமயமானது. இந்து, முசுலீம், சீக்கியர், ஓவியர், அதிவேகமாக பைக் ஓட்டுபவர்கள், பீரைக் குடித்தவாறே பனைமர உயரத்தில் இருந்து தண்ணீரில் குதிப்பவர்கள், இப்படிப் பல அடையாளங்களோடு ஆட்டமும், பாட்டமுமாய் நாளைக் கழிப்பவர்கள். தோழியின் காதலனான மாதவன் இந்திய விமானப்படையில் பைலட்டாகப் பணியாற்றுபவர். அவரும் இந்தக் கும்மாளத்தில் அவ்வப்போது பங்கு பெறுபவர்.

இந்த நண்பர் வட்டத்தின் இளமைத் துடிப்பில் மனதைப் பறி கொடுத்த அந்த வெள்ளைக்காரப் பெண்மணி இவர்கள்தான் தன் படத்தில் நடிப்பதற்குப் பொருத்தமானவர்கள் என்று முடிவு செய்கிறாள். இந்த நண்பர் வட்டத்திற்கு பாரதப் பண்பாடு குறித்து உபதேசம் செய்து சண்டையிடும் அதுல் குல்கர்னி ஒரு தீவிரமான பாரதீய ஜனதா தொண்டர். அவரையும் தன் படத்தில் நடிக்க வைப்பதற்குத் தேர்வு செய்கிறாள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நண்பர் வட்டத்தினர் பின்னர் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆரம்பத்தில் இந்த ஆவணப்படத்தை தமாசாகக் கருதும் நண்பர்கள் அந்த வெள்ளையினப் பெண்ணின் தீவிரமான அக்கறையை உணர்ந்து வசனங்களையெல்லாம் மனப்பாடம் செய்து நடிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். நவ ஜவான் பாரத் சபாவின் உறுப்பினர்கள் நெருப்பின் மேல் உறுதிமொழியெடுப்பது, காகோரி ரயில் கொள்ளை, லாலாலஜபதிராய் மீதான தடியடி, அதற்குப் பதிலடியாக ஆங்கிலப் போலீசு அதிகாரியான ஸாண்டர்சைக் கொலை செய்வது, பாராளுமன்றத்தில் பகத்சிங் குண்டு வீசுவது எல்லாம் படமாக்கப்படுகின்றன.

இறுதியில் போராளிகள் தூக்கிலிடப்படும் காட்சிகளைத் திரையில் பார்க்கும் நண்பர்கள் சில கணங்கள் உறைந்து போகிறார்கள். ஒரு மேட்டுக்குடி மது பாரில் அமர்ந்த படி, சீரழிந்து வரும் இன்றைய இந்தியாவைக் காப்பாற்றுவது குறித்து விவாதிக்கிறார்கள். பைலட் மாதவன், படித்தவர்கள் இராணுவத்துக்கும், ஐ.ஏ.எஸ்ஸுக்கும், அரசியலுக்கும் வரவேண்டும் என்கிறார். படவேலைகளுக்கு இடையே ஆட்டமும், பாட்டமுமான அவர்களது கொண்டாட்ட வாழ்க்கையும் தொடருகின்றது.

ஆனால் மிக்21 விமானத்தில் பறந்த மாதவன் விபத்தில் இறந்து போக நண்பர்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை ஒரு முடிவுக்கு வருகிறது. விமானப்படையில் பல ஆண்டுகளாகப் பணியிலிருக்கும் ரசியாவின் மிக்21 விமானங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாவது குறித்துப் புலனாய்வு செய்த என்.டி.டி.வி தொலைக்காட்சி, தரங்குறைந்த மிக் ரக விமானங்களை வாங்கியதில் ஊழல் இருப்பதாக அறிவிக்கிறது. ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க. அமைச்சரவையில் ஊழல் செய்த அந்த மந்திரி விமானம் வாங்கியதில் ஊழல் ஒன்றுமில்லையெனவும், விமானம் விபத்திற்குள்ளானதற்கு பைலட்டின் தவறே காரணம் என்றும் அலட்சியமாகக் கூறுகிறார்.

அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், மாணவர்களைத் திரட்டி இந்தியா கேட் எதிரே (குடியரசுத் தின ஊர்வலம் நடக்கும் இடம்) மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியாக ஊர்வலம் நடத்தி தங்களது எதிர்ப்பைக் காண்பிக்கிறார்கள். எரிச்சலடையும் மந்திரி போலீசை விட்டுக் கொடூரமாகத் தடியடித் தாக்குதலை நடத்துகிறார். பலருக்கு மண்டை உடைகிறது. மாதவனின் வயதான அம்மா கோமா நிலைக்குப் போகிறார். இந்தக் காட்சி லஜபதிராயின் தடியடிக்காட்சிகளுடன் மாற்றி மாற்றிக் காண்பிக்கப்படுகிறது.

ஆத்திரமடைந்த நண்பர்கள் முதன்முதலாக அரட்டைக்குப் பதிலாகக் கோபத்துடன் கூடி விவாதிக்கிறார்கள். தாங்கள் ஏற்று நடித்த புரட்சியாளர்களின் வசனங்களை இப்போது நிஜத்தில் பேசுகிறார்கள். இங்கும் ஆசாத்தும், பகத்சிங்கும், பிஸ்மில்லும் மாறி மாறி வந்து பேசுகிறார்கள். எது நிழல் எது நிஜம் என்ற பேதம் தெரியாதபடி விவாதம் நடைபெறுகிறது. இறுதியில் மந்திரியைக் கொல்வது என்று முடிவெடுக்கிறார்கள்.

ஆவணப்படத்தில் இடம் பெறும் சான்டர்ஸ் கொலைக்காட்சியைப் போலவே அதே சூழலில், அதே உத்தியோடு மந்திரி கொலை செய்யப்படுகிறார். தொலைக்காட்சியில் பரபரப்புச் செய்தியாக இடம் பெறும் இந்தச் சம்பவத்திற்குக் காரணம் யார் என்று தெரியாத சூழ்நிலையில் ஐ.எஸ்.ஐ. சதியாக இருக்குமோ என்று அரசியல் உலகில் பேசப்படுகிறது. தங்களது கொலைக்கான நியாயம் இதன் மூலம் மறைக்கப்படுவது கண்டு குமுறும் நண்பர்கள் அதை உலகிற்குச் சொல்லுவதென முடிவெடுக்கிறார்கள். ஒருநாள் அதிகாலையில் ஆல் இந்தியா ரேடியோவைக் கைப்பற்றி நேரடி ஒலிபரப்பில் தங்கள் தரப்பு நியாயத்தைத் தெரிவிக்கிறார்கள். தொலைபேசியில் வாழ்த்துக்களுடன் வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள். தொலைக்காட்சிகளிலும் இந்தச் சம்பவம் தலைப்புச் செய்தியாகக் காட்டப்படுகிறது.

இவர்களைப் பயங்கரவாதிகளாகக் கருதும் அரசு அதிரடிப்படையை வானொலி நிலையத்திற்கு அனுப்புகிறது. நண்பர்கள் அனைவரும் துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாகத் துளைக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஆவணப்படத்தில் தாங்கள் தூக்கிலிடப்படும் காட்சிகளை நினைத்தவாறே சிரித்துக்கொண்டே சாகிறார்கள். என்.டி.டி.வியின் காமராக்கள் வழியாக இந்தியா முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் அரசின் நடவடிக்கையைக் கண்டிப்பதோடு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை உணர்ச்சிப் பெருக்கோடு பேசுகிறார்கள். திரையரங்கை விட்டு வெளியேறும் ரசிகர்கள், வரலாற்றிலிருந்து பகத்சிங்கும், ஆசாத்தும் தங்களுக்குப் பிடித்த விதத்தில் உயிர்த்தெழுந்து வருவதை கைதட்டியவாறே எண்ணி மகிழ்ந்தவாறு மனதில் பாரத்துடன் வெளியேறுகிறார்கள்.

படத்தில் வெளிநாட்டில் இருந்து வருகின்ற பெண்ணான சூ, தன்னுடய தாத்தா அவர்கள் எழுதிய தினக்குறிப்பை ஆதாரமாக கொண்டு படம் எடுக்க முனைகிறாள். அவள் படத்திற்கு யாரும் ஆதரவு தராத பட்சத்தில் தன் இந்திய தோழியின் உதவியுடன் தான் படம் எடுக்கிறாள். அதனால் அவள் தன் சமகால அரசியல் நிகழ்வுகளான ஈராக் பிரச்சினை பற்றி அங்கே பேச வேண்டிய அவசியம் அவளுக்கில்லை. கோலங்கள் சீரியலில் டியன்னென் சதுக்கம் பற்றி வந்தால் எவ்வளவு வித்தியாசமாக படுமோ அதே அளவு வித்தியாசமாக பட்டிருக்கும்.

மேலும் நண்பர் படத்தின் ஸ்பான்ஸர் கோக் எனக் கூறுகிறார். அது பற்றி தெளிவாக தெரியாததால் விடுவோம். கோக் என்கிற அமெரிக்க கம்பேனி பல விஷயங்களை தங்கள் மார்க்கெட்டிங் உத்திக்காக பயன்படுத்துகிறது. மேலும் இந்த இளைஞர்கள் திருந்திய பின் வரும் காட்சிகள்்சிகளில் ஒன்றில் கூட கோக்கை பார்த்ததாக எனக்கு நினைவில்லை, நண்பர்கள் கவனித்திருந்தால் தெரிவிக்கலாம். ஆகவே, இந்திய தேச பக்தியில் கோக்கும் ஓர் அங்கம் என தெரிவிக்கும் எண்னம் டைரக்டர்க்கு எல்லை என நினைக்கிறேன்.

மிக் 21 ரக விமானங்கள் வாங்கியதில் ஊழல் என படத்தில் காண்பிக்கப் படுகிறது. இதில் ஏன் அமெரிக்க எஃப் 16 விமானங்களை பற்றி சொல்லவில்லை என்கிற கேள்வி எழுகிறது. அதாவது, நியூ படத்தில் எஸ்.ஜே.சூரியா ஒரு டயலாக் வைத்திருப்பார். “இதுத்தான் கதை, பிடிக்கலேன்னா இப்பொவே எந்திரிச்சி போயிடு! பக்கத்துல உக்காந்து படம் பார்கிறவனயும் கெடுக்காத” அப்படின்னு. நான் என்ன சொல்ல வர்றேன்னா, படத்தோட முடிச்சு அங்க தான் இருக்கு, அத விமசனம் பண்ரது, யொசிக்க வேண்டிய விஷயம்.

>>>மகிழ்ச்சியாக வாழும் அந்த நண்பர் வட்டத்தில் சோகத்தைக் கொண்டு வரும் ஒரு ஊழல் மந்திரியை எப்படிப் போட்டுத் தள்ளுவது என்பதை வித்தியாசமாகச் சொல்லவேண்டும் என்று யோசித்திருக்கும் இந்தப் படத்தின் படைப்பாளிகள் அதற்காக மட்டுமே பகத்சிங், ஆசாத் வரலாற்றை வம்படியாய் இழுத்து வந்திருக்கிறார்கள்.<<<<

அப்பொழுதைய நிலமையும் இப்பொழுது உள்ள நிலைமையும் எப்படி ஒரே மாதிரி இருக்கிறது என உணர்த்த தான், பகத் சிங் வரலாறு வருகிறது என நினைக்கிறேன். அந்த கால இளைஞர்கள் எவ்வாறு அடக்குமுறையை எதிர் கொண்டார்கள் எனக் கூறவும் அந்த காட்சிகள் பயன்பட்டது என்பது என் கருத்து.

படத்தில் பல காட்சிகள் ரசிக்க கூடியனவாக இருக்கும் பொழுது சில காட்சிகளை வைத்துக் கொண்டு இவ்வாறு பேசுவது எந்த அளவுக்கு சரி என எனக்கு தெரியவில்லை. தாங்கள் சொல்ல விரும்பியதை சொன்ன பிறகு தங்கள் ஆயுதங்களை குப்பைத் தொட்டியில் போடும் காட்சிகல் பலத்த கரகோஷங்களை பெருகின்றன. இது போல படங்கள் மக்கள் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறர்கள் என்பதை வைத்துத் தான் படம் வெற்றி அடையும். ஹே ராம் படத்தில் காந்தியை கொன்றவர்களை சப்போர்ட் செய்து படம் எடுத்திருக்கிறர்கள் என சொல்லியே படம் பார்க்க செல்லாதவர்கள் நாம். அதனால் மைண்ட் செட் என்பது இந்த படங்களை பொறுத்தவரை மிகவும் முக்கியம்.

மற்ற படி ரங் தே பசந்தி படம் ரசிக்க கூடிய படம் என்பதில் யாருக்கும் சந்தேகம் தேவை இல்லை என்படு என் கருத்து.

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)
About The Author

prasanna

Blog Comments
Changing Times | Bragadeesh Prasanna May 30, 2020

[…] and what not. I have had such incidents happening too. I first got into a fight with people over a Tamil blog regarding the movie ‘Rang De Basanti’. It quickly turned into a left vs right fight. I had no idea how the world worked at that time. […]

Reply
Leave a Comment

Cancel Reply

*Please complete all fields correctly

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.